அன்புடைய வாசகர்களே,
இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா? இந்த இலக்கத்தின் உரிமையாளர் எங்கள் செய்தி இணையதளத்தின் ஆசிரியர் என்றும், எங்கள் வாட்ஸ்அப் செய்தி குழுவில் இருப்பதாகவும் கூறி, எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களை அழைக்க வாய்ப்புள்ளது.
இந்த நபர் இலங்கையில் வசிப்பவர் அல்ல, மேலும் எங்கள் இணையதளம் அல்லது எங்கள் நிறுவனத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாதவர் ஆவார். மேலும், எங்கள் நிறுவனம் சூம் தொழில்நுட்பத்தின் மூலமாகவோ அல்லது வேறு எந்த முறையிலோ எந்த கூட்டத்தையும் ஏற்பாடு செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
இந்த மோசடி நபரால் ஏமாறாதீர்கள் என்று எங்கள் ஆசிரியர் குழு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
நன்றி
