தமிழகம் ராமேஸ்வரம் அருகே கடற்கரை ஓரத்தில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் இருப்பதான தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த அக்காமடம் கடற்கரை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் போது தப்பிய விடுதலைப் புலிகள் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு, போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அப்பகுதியில் இன்று மாலை முதல் பலமணி நேரத்துக்கு மேலாக காட்டுப் பகுதியில் வெடிகுண்டுகளை தேடி ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு இடம்பெறும் தேடுதல் தொடர்கின்றபோதும் இதுவரை வெடிகுண்டுகள் ஏதும் மீட்கப்படவில்லை.
TL