37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

Date:

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். 

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 37 சீனப் பிரஜைகளே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி, சட்டவிரோத முறையில் நாட்டில் தங்கியிருந்ததுடன் பல்வேறு சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். 

நாடு கடத்தப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இவர்களை சீனாவிற்கு அழைத்துச் செல்வதற்காக அந்நாட்டின் 11 பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். 

இவர்கள் அனைவரும் நேற்று (04) இரவு 10.50 மணியளவில், சீன ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான MU-714 என்ற சாதாரண பயணிகள் விமானம் மூலம் சீனாவிலுள்ள குன்மிங் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...