இலங்கை இந்திய எல்லையில் மேலதிகமாக கடற்படை கப்பல்களை இந்தியா நேற்று முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை கட்டுக்கடங்காது தொடர்ந்தும் ஏறிய வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தினமும் பலர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு தப்பிச் செல்பவர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவை அடைகின்றபோதும் மேலும் ஒருபகுதியினர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நேற்று முதல் இலங்கை இந்திய எல்லைப் பகுதியில் மேலதிகமாக 3 கடற்கலங்களை இந்திய கரையோரப் பாதுகாப்பு படையினர் பணியில் இறக்கியுள்ளனர்.
TL