Friday, February 3, 2023

Latest Posts

இந்திய தூதுவரிடம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரிய இலங்கை கடற்படையினர்.

யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர்  யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட 3 தீவுகளிற்குச் செல்வதற்காக கடற்படையினரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுவருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்படைத் தளபதி அறிவித்துள்ளார்.

இதன் பின்பு பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து அங்கிருந்து கிடைத்த அனுமதியை கடற்படையினரிடம் சமர்ப்பித்தே யாழில் உள்ள இந்ந்தியத் தூதுவர் 3 தீவிகளிற்கும் பயணித்துள்ளார்.

இது தொடர்பில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் தமது அதிருப்பியினையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்கு தெரிவித்ததோடு சதாரண சுற்றுலாப் பயணிகளே சென்றுவரும் இடத்திற்கு எம்மிடம் பாதுகாப்பு அமைச்சு அனுமதி கோரியிருக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார்

இவ்வாறு இந்தியத் துணைத் தூதுவர் தெரிவித்த அதிருப்தி தொடர்பில் பதிலளித்துள்ள கடற்படையினர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் சாதாரண பயணிகள் படகில் சென்று வருகின்றனர். இருந்தபோதும் இந்திய அதிகாரிகள் இலங்கை கடற்படையினரின் படகில் சென்று வருவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்படுகின்றது எனப் பதிலளித்துள்ளனர்.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.