Thursday, June 1, 2023

Latest Posts

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன காணி
வான்படைக்குத் தாரைவார்ப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 298 ஏக்கர் காணி வான்படைத் தளத்துக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் ஏறக்குறைய 75 வருடங்களாகப் இந்தக் காணி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவின் காலத்தில் வருமானம் ஈட்டுவதற்காக பயன்படுத்தப்படாத வளங்களை அதிக உற்பத்தி வழியில் பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதன்படி, அமைச்சின் ஒப்புதலுடன், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி கனேடிய நிறுவனத்துடன் இணைந்து சூரிய சக்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. காணியை இலவச மானியப் பத்திரம் மூலம் வானொலிக் கூட்டுத்தாபனத்துக்கு மாற்றி உரிய திட்டத்தில் வருமானத்தை ஈட்டவும், அரசாங்கம் வழங்கும் பணத்தை நிறுத்தவும் இரண்டாவது அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இதற்கிடையில், தற்போதைய ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட கடைசி அமைச்சரவைப் பத்திரத்தின் பின்னர்,  ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் கனேடிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு அமைவாக ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் விதிவிலக்கு அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அனைத்துப் பரிந்துரைகளையும் பெற்ற பின்னர், இறுதி எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறுவதற்காக கோவையை கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்தது.
இந்தநிலையிலேயே ஜனாதிபதியின் செயலாளர், ஒலிபரப்பு நிலையத்தை மூடிவிட்டு காணியை வான் படையிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூற்று ஆய்வொன்றை மேற்கொள்ள வான் படையினரை நியமித்துள்ளார். திருகோணமலையில் போதுமான முகாம்கள் உள்ளதாலும் இப்பகுதிகளுக்கு வான்படை முகாம் தேவையில்லை எனவும் திருகோணமலை சிவில் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.