வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்ட காலத்தில் இடம்பெற்றதான குற்றச் சாட்டுத் தொடர்பில் இரு அதிகாரிகளிற்கு குற்றப்பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்டத்தின்போது அதனை நிறைவேற்றும் அதிகாரிகளாகச் செயல்பட்ட இரு நிர்வாக அதிகாரிகளும் தற்போது வேறு பதவிகளில் உள்ளபோதும் நெல்சிப் திட்டத்தில் மோசடி இடம்பெற்றதாக மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் கணக்காய்விற்கும் உட்படுத்தப்பட்டன.
அவ்வாறு இடம்பெற்ற அறிக்கைகள் நிர்வாக அதிகாரிகளின் நியமன அதிகாரியான உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது குற்றப் பத்திரம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட குற்றப்பத்திரம் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பிரதம செயலாளரின் கைக்கு கிட்டய நிலையில் நேற்று காலை பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகத்தின் ஊடாக உரியவர்களின் கைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் 14 நாள்களிற்குள் உரிய அதிகாரிகள் தமது பக்க விளக்கத்தை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
TL