வாகன இறக்குமதி குறையவில்லை

0
146

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளரும் மூத்த சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

“வாகன இறக்குமதி நாம் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை என்று நினைக்கிறேன். டொலரின் மதிப்பு உயர்வால் ஏற்பட்ட அழுத்தத்தை குறைப்பதற்காகவே இந்த வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இறக்குமதி குறையவில்லை,” என அவர் கூறினார்.

சுங்க ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்தை நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here