கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

0
151

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே தொடர்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கூற்றுக்கு பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதைப் போன்று, சுரேஷ் சலே மீது பொலிஸாரால் எந்தவிதமான தாக்குதல்களோ அல்லது மனிதநேயமற்ற நடத்தைகளோ மேற்கொள்ளப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே தொடர்பாக சாதாரண சந்தேகநபர் ஒருவருக்குச் செயல்படுவதைப் போன்றே சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எந்தவொரு சிறப்புச் சலுகைகளோ அல்லது அலட்சியப் போக்குகளோ காட்டப்படவில்லை என்றும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுரேஷ் சலே சிறையில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here