எல்லை தாண்டாமல் மீன்பிடிக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை

0
3

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் தடுக்க ஆவன செய்யுமாறு கோரி இந்தியத் துணைத் தூதர் ஊடாக தமிழ்நாடு முதல்வருக்கு வடக்கு மீனவர்களால்  மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் நிலவிய மீன்பிடித் தடைக் காலம் இன்றுடன் நிறைவடைவதனால் தமிழக மீனவர்கள் கடற்றொழிலிற்கு தயாராகி விட்டனர். இவ்வாறு தொழிலிற்கு வரும் மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறாது தொழிலில் ஈடுபட அறிவுறுத்துவதோடு உரிய நடவடிக்கையினையும் மேற்கொள்ளுமாறு கோரியே இந்த மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

இந்தியத் துணைத் தூதர் ஊடாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்ராலின் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

TL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here