இங்கிலாந்து சென்ற நான்கு பொலிஸார் மாயம்

Date:

சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து சென்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையை கைவிட்டவர்களாக கருதப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற 65வது சர்வதேச பொலிஸ் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்ற இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், இம்மாதம் 4ஆம் திகதி பணிக்கு சமூகமளிக்கவிருந்த நிலையில், அன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால், ஆராய்ந்து பார்த்த போது கடந்த மே மாதம் 25ஆம் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பவில்லை என குடிவரவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் சேவையை விட்டு வெளியேறியதாக பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...