பலாலி விமான நிலையம் யூலை 01ஆம் திகதி முதல் இயக்க முடியும் என அமைச்சர் நிமால் சிறிபாலடீசில்வா பலாலியில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஊடான கப்பல் போக்கு வரத்து ஆகியவற்றை ஆரம்பிப்பது தொடர்பான ஆய்வுக் கலந்துரையாடல் நேற்று மாலை பலாலி விமான நிலையத்தில் இடம்பெற்றது.
விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் விமான நிலையத்தை எதிர் வரும் 1ஆம் திகதி முதல் இயக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்த அதேநேரம் விமான நிலையத்தில் உள்ள அபிவிருத்திப் பணிகளிற்காக இந்தியா வழங்க இணக்கம் தெரிவித்த 300 மில்லியன் இந்திய ரூபாவினையும் கடனாக இன்றி அன்பளிப்பாக வழங்குமாறும் அமைச்சர் இந்தியத் துணைத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது கருத்துரைத்த இந்தியத் முணைத் தூதுவர் 300 மில்லியனை அன்பளிப்பாக வழங்குவது தொடர்பான கோரிக்கை தூதுவரின் மேலதிக நடவடிக்கையில் உள்ளது. அதே நேரம் 01ஆம் திகதி சேவையை ஆரம்பிப்பதாயின் அதிகர சபை அதன் அனுமதிகளை விரைவாக வழங்க வேண்டும் அவை கிடைக்கும் வரை அதிகர சபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரலைத் தொடர்புகொள்வோம்.
இந்த விமான சேவையை நடாத்த இந்தியாவில் அரச மற்றும் தனியார் விமான சேவை நிறுவனங்கள் மிக ஆர்வமாகவே உள்ளனர் எனத் தெரிவித்தார்.
TL