Monday, August 8, 2022
spot_img

Latest Posts

யாழ்ப்பாணத்தில் 8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்று  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது!

 யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 65வது சுதந்திர தின ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.

யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ்,வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம்,யாழ் மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணன், மாநகர ஆணையாளர் தி.ஜெயசீலன்,  , மற்றும் யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள்  பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்

இந்த யோகா ஆரம்ப நிகழ்வு மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பமாகிய  சர்வதேச யோகா தின நிகழ்வு யாழ் இந்திய துணைத்தூதுவரின்  வரவேற்புரையுடன்  இடம்பெற்ற தோடு யோகா பயிற்சியும்  இடம்பெற்றது.  நிகழ்வின் இறுதியில் இன்றைய யோகா பயிற்சியில்  கலந்து கொண்டோருக்கு  சான்றிதழ்கள்  வழங்கி வைக்கப்பட்டது.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.