மருந்திற்காக வெடிபொருள் வைத்திருந்த இருவர் கைது.

0
56

கச்சாய், புலோப்பளை பகுதிகளில் வெடி மருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற் தயாரிப்பவர்களிற்கு விற்பனை செய்யும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவரே நேற்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மிகவும் உயிர் ஆபத்தான வெடிபொருட்களை எடுத்து அதில் இருந்து வெடிமருந்துகளை அகற்றி விற்பனை செய்யும் அளவிற்கு போரின் அவலம் இன்னும் நீண்டு செல்கின்றது.

இவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இருவரிடமும் 6 குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.

TL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here