கோத்தா கோ கோம்,  தமிழ் மக்களின் நிலை என்ன  கனடா கேள்வி.

0
37

கோத்தா கோ கோம் தொடர்பில் தமிழ் மக்களின் மன எண்ணம் எவ்வாறு உள்ளது என்பதனை அறிய  இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிற் மெகெனற் ஆர்வம் காட்டுகின்றார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் கொழும்பில் இருந்து புகையிரதம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பலரையும் சந்திக்கின்றார்.

3 நாள்கள் பயணமாக  குடாநாட்டிற்கு  குடும்ப சகிதம் பயணித்துள்ள தூதுவர் எதிர்வரும் வியாழக் கிழமை மாலை வரையில் குடாநாட்டிலேயே தங்கவுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைச் சந்தித்து கொழும்பில் இடம்பெறும் கோத்தா கோ கோம் போராட்டம் தொடர்பான கருத்து அதில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளாமை தொடர்பாகவும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் தமிழ் மக்கள் சந்திக்கும் அவலங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.

இவற்றிற்குப் பதிலளித்த மாநகர முதல்வர் கோத்தா கோ கோம் போராட்டக்காரர்கள் இந்த மொருளாதார நெருக்கடிக்கு தமிழ் மக்களிற்கு எதிரான போர்தான் காரணம் என ஏற்கும் மனோநிலை காணப்படாதமையினால் தமிழ் மக்களும் அதில் கலந்துகொள்ளும் மனோ நிலை காணப்படவில்லை.

இதேநேரம் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு மிக உச்சமாக இருக்கின்றது. மக்கள்  நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இந்த நெருக்கடி காரணமாக மாநகர சபையின் பல பணிகள்கூட கைவிடப்படும் அல்லது பாதிக்கப்படும் சூழலே உள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதேநேரம் யாழ் வந்துள்ள கனேடியத் தூதுவர் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும. தொழிற்றுறையைச் சேர்ந்தவர்களையும் நாளை சந்திக்கின்றார்.

TL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here