அரசியல்வாதிகளின் வரவிற்காய் காத்திருக்கும் மிதிவண்டிகள்.

0
75

தெல்லிப்பளையில் பூசாரியின் வரவிற்காக 40 துவிச்சக்கர வண்டிகள் காத்திருப்பதாக பயணாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் ஊடாக பனை தென்னை உற்பத்தியாளர்களிற்கான ஊக்குவிப்பிற்காக வழங்குவதற்கு 2021ஆம் ஆண்டின்  ஒதுக்கீட்டில் இருந்து 40 துவிச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டது..

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் இளவாளையில் உள்ள ப.தெ.வ. சங்கத்திடம் கையளிக்கப்பட்டபோதும் பயணாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இதனால் 40 துவிச்சக்கர வண்டிகளும் 5 மாதமாக தூக்கி கொடுப்பார் இன்றி காவல் கிடக்கின்றன. இதனை வழங்குவதில் அரசியல் போட்டியே காரணம் எனவும் பயணாளிகள் தெரிவிக்கின்றனர்.

ப.தெ.வ.சங்கத்தின் களஞ்சியத்தில் துவிச்சக்கர வண்டிகள் உள்ளபோதும் அவை இன்றுவரை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் பொறுப்பிலேயே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டதனால் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காலத்திலும் இவ்வாறு 40 துவிச்சக்கர வண்டிகள் யாரின் வரவிற்காக காத்திருக்கின்றது என தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறியை தொடர்பு கொண்டு கேட்டபோது,

இந்த 40 துவிச்சக்கர வண்டிகளும் களஞ்சியத்தில் இருப்பது உண்மை எனவும் இவற்றை விரைவில் வழங்க ஆவண செய்யப்படும்  எனப்  பதிலளித்தார்.

TL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here