இலங்கைக்கு கடத்த முற்பட்ட 700கிலோ கடல் அட்டை தமிழகத்தில் மீட்பு.

0
6

இராமேஸ்வரத்தை அடுத்த வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 35 லட்சம் மதிப்பிலான 700 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையை கைப்பற்றிய வனத்துறையினர் தீவிர விசாரணை.

மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடலட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடன் அட்டை மற்றும் பதப்படுத்துவதற்கு பயன்படுத்திய, அலுமினிய பாத்திரங்கள், ஒரு ஜெனரேட்டர் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சர்வதேச அளவில் சுமார் 35 லட்ச ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
TL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here