எரிபொருள் தில்லாலங்கடி.

0
305

ந.லோகதயாளன்.

யாழ் குடாநாட்டில் அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் பாமரன் சுடலைக்கு போகவும் பெற்றோல் இல்லை என தனியார் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த 3 தினங்களாக எரிபொருள் வழங்கும் நிலையம் எதற்கு சென்றாலும் அவசர சேவைக்கு எனவும் அரச உத்தியோகத்தர்களிற்கு எனவும் தெரிவிக்கப்படுகின்றது அல்லது அவர்களிற்கு தனியான வரிசை என்கின்கின்றனர். நான் லான்மாஸ்ரர் ஓடி உழைத்தால்தான் எனது குடும்பம் சாப்பிடும் பிள்ளையல் படிப்பிற்கும் உழைக்க  முடியும் நான் 3 நாளாக வரிசையில் நின்று எரிபொருள் பெற்று எவ்வாறு சீவியம் நடத்துகின்றது என யாழ் நகரில் இரு சக்கர உழவு இயந்திரம் ஓடும் பரமானந்தன் ( பாமா) தெரிவிக்கின்றார்.

அரச உத்தியோகத்தர்களிற்கு தனி வரிசை, பரீடசை வினாத்தாள்  மதிப்பீட்டு உத்தியோகத்தர்களிற்கு முன் உரிமை, சுகாதார சேவையினருக்கு தனி நாள், பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டில் ஒரு பெற்றோல் நிலையம் எனப் பிரித்து நாள் ஒதுக்கும்  மாவட்டச் செயலாளருக்கு விவசாயிகளிற்கு ஒரு நாள் அல்லது ஒரு எரிபொருள் நிலையம், தினக் கூலிக்காக வாடபை சேவை நடாத்தும் என்போன்ற ஏழைகள் எவ்வாறு எரிபொருளை பெறுவது நாள் கணக்கில் காவல் நின்று வீதியில் படுத்திருத்து எரிபொருளை பெறும்போது ஒழுங்கு படுத்த முன்வராத மாவட்ட அரச அதிபர் அரச உத்தியோகத்தருக்கு எரிபொருள்  இல்லை என்ற பிறகே நித்திரையால் எழுத்துள்ளார் என இல.36, ஏ.பி லேன், நாவலர் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் வசிக்கும் வாடகை வாகனச் சாரதியான யோசப் பத்மநாதன் தெரிவிக்கின்றார்.

அரச உத்தியோகத்தர்கள் எரிபொருள் பெறுவதில் கடினம் என்றவுடன் வாரத்தில் 5 நாள் பணியை 4 நாள்களாக்கி சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஆட்டோவை நம்பியே வாழ்வாதாரம் நடாத்தும் ஆயிரக் கணக்கானோருக்கு எந்த ஏற்பாடும் கிடையாது. எவரும் இதுவரை வாய் திறக்கவும் இல்லை என்கின்றார் யாழ்ப்பாணம் முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் முன்னாள்  தலைவரும் ஆட்டோ உரிமையாளருமான முஸ்லீம் கல்லூரி வீதியில் வசிக்கும்  இராசமணி விஜயராயா தெரிவித்தார்.

இதேநேரம் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச ஊழியர்கள் பணிக்குச் சென்று ஒப்பம் இட்டுவிட்டு வந்தே வரிசையில் நிற்கின்றனர். அதாவது அங்கே சம்பளம் இங்கே எரிபொருள் மீனை வாங்கி ஊர் ஊராக விற்கும் நாம் எப்போது வரிசையில் நின்றால் பெற்றோல் கிடைக்கும் எனக் கூற முடியுமா என்கின்றார் 43 வயதான  மரியதாஸ் நியூட்டன் வின்சன்போல்.
பா.நிரோஜன். 32 வயதையுடைய மானிப்பாயைச் சேர்ந்த மிக்கசர் உற்பத்திகளை நடமாடும் வியாபாரம் மூலம் சந்தைப்படுத்துபவர் தெரிவிக்கையில்,

தேவி மசாலா மிக்சர் என்னும் பெயரில் இயங்கும் எனது தொழிற்சாலையில் 12 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். எமது உற்பத்தியை படி வாகனத்தில் கொண்டு சென்றே சந்தைப்படுத்துவது வழமையாகும். இன்று வாகனத்திற்கு டீசல் இல்லை என்பதனால் ஒரு நாள் மோட்டார் சைக்கிளில் விநியோகம் செய்தோம். தற்போது 4 நாள்களக விநியோகத்திற்கு செல்ல டீசலும் இல்லை பெற்றோலும் இல்லை. அதனால் அதிக செலவில் செய்த உறபத்திகள் தேங்குவதனால் இன்று சங்கானை முதல் யாழ்ப்பாணத்திற்கு மட்டும் துவிச்சக்கர வண்டியில் சென்று சந்தைப்படுத்தும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன் என்கின்றார்.

இவ்வாறு பொது மக்கள் தரப்பில் தெரிவித்தாலும் அரச உத்தியோகத்தர்கள் தரப்பில் ஆசிரியரான இ.சாரங்கன்கருத்து தெரிவிக்கையில்,

இதனை தீர்ப்பதறகு கடந்த மார்ச் மாதமே பங்கீட்டு அட்டை வழங்கி அவரவர் வசிக்கும் பிரதேச எரிபொருள் நிலையத்தில் சமமாகப் பெற்றுக்கொள்ள ஒழுங்கமைத்திருந்தால் மாவட்ட நிர்வாகம் இந்த நெருக்கடியை இன்று எதிர்நோக்கியிருக்காது என்றார்.

இதேநேரம் மாணவர்களின் கல்விக்காகவும் அடுத்த ஆண்டு கல்விச் செயறபாட்டிற்காகவும் அனைவரது பிள்ளைகளான மாணவர்களின் வினாத்தாள் திருத்தும் பணி மாலையிலேயே நிறைவடையும் அதன் பின்பு வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று மறுநாள் பணிக்கும் செல்ல முடியுமா, இதனை அரச உத்தியோகத்தர்கள்கூட உணர மறுக்கின்றனர் என வினாத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் ஆசிரியை சிவந்ந்தினி  தெரிவிக்கின்றார்.

இதேநேரம் காலை 7 மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு செல்லும் எம்மை தனியார் மட்டுமல்ல அரச ஊழியர்கள்கூட மதிக்கவில்லை. மாறாக ஒழுங்குபடுத்தும் திணைக்களம் தமது திணைக்களத்திற்கு 5 ஆயிரம் ரூபா வரை வழங்கிய சம்பவமும் உண்டு. ஆசிரியர்களிற்கு 500 ரூபாவிற்கும் ஆயிரம் ரூபாவிற்கும் வழங்கப்பட்ட அதே நேரம் எமது பாடசாலை ஆசிரியர்கள் 61 பேருக்கு இலக்கம் வழங்கி 4 நாள்கள் கடந்து விட்டன. ஆனால் 20 பேரஇற்குகூட எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வாறானால் வரும் எரிபொருள் எல்லாம் எங்கே போகிறது என  தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபரான தி.வரதன் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

இவை இவ்வாறு இருக்க நேற்றைய தினம் யாழ். நகரில் உள்ள ப.நோ.கூ.சங்கத்திறகு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இருந்தபோதும் பெற்றோலைப் பெறுவதற்காக காத்திருந்த அரச உத்தியோகத்தர்கள் அந்த டீசலை வழங்க விடாது குழப்பத்தை ஏற்படுத்தியதையும் அவதானிக்க முடிந்தது. அரச உத்தியோகத்தர்களே இவ்வாறு செயல்படும்போது பாமரனை குறைகூற என்ன உரிமை இந்த அரச ஊழியர்களிற்கு என டிப்பர் சாரதியான கோப்பாயைச் சேர்ந்த  கு.சதீஸ்குமார் கேள்வி எழுப்புகின்றார்.

இவை அனைத்தும் தொடர்பாக பிரதேச செயலாளர்களை தொடர்பு கொண்டால் மாவட்டச் செயலாளரை தொடர்புகொள்ளுமாறு பதிலளிக்கின்றனர். மாவட்டச் செயலாளரோ உரிய பதில் வழங்க முடியாது திணறுகின்றார். யாரோடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம் ஆண்ட நீ அருள் இல்லையானால்.

TL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here