ரணிலை சந்தித்த அனுரவின் சகா!

0
95

க்ளீன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நெருங்கிய ஆலோசகருமான கிரிஷாந்த குரே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கடந்த ஜூலை 4 ஆம் திகதி சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here