நெருக்கடியான நேரத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட முன் வர வேண்டும் என மதகுமார்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
நல்லூர் ஆதீணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே நல்லை ஆதீண குரு முதல்வர் சிறில சிறி சோமசுந்தர தளசிக பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம், தெல்லிப்பளை துர்க்காதே தேவஸ்தான தலைவர் ஆர். திருமுருகன், காவா ஆதீண சுவாமிகள் உள்ளிட்டோர் இதனை கூட்டாக கோரினர்.
இதன்போது இலங்கையில் இன்றைய சூழலில் மக்களின் அவலம் வெளிப்படுத்தியுள்ளதோடு தென்னிலங்கை அரசியலில் இன மத வேறுபாடு இன்றி பொது நோக்குடையவர்வர்கள் ஒன்றுகூடி இலங்கை அரசியல் தர்மத்தின்பால் இல்லை என்பதனை உலகிற்கு எடுத்துக்கூறியுள்ளனர்.
இந்த சூழலில் தமிழ் மக்களிற்காக பாராளுமன்றம் சென்ற பிரதிநிதிகள், கட்சிகளின் பிரமுகர்கள் அறிவு பூர்வமாக சிந்தித்து ஒன்றுகூடி ஒட்டுமொத்தமான நல்ல சந்தர்ப்பத்தை தமிழ் இனத்திற்கு இத் தருணத்தில் பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்திலும் ஒன்றுபட்டு எமது இனத்திற்காக குரல்கொடுக்காது விட்டால் என்றைக்கும் எமக்கு ஓர் ஆறுதல் கிடையாது.
எனவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு , தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். இதற்கு செவிமடுத்து ஓர் பொது இடத்தில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி மக்களின் நன்மை கருதி ஒழுங்கான சில முடிவுகளை எடுத்து மக்களின் பிரச்சணைகளை தீர்க்க வேண்டும்.
கட்சிகள் பலவாக இருக்கலாம், கொள்கைகள் பலவாக இருக்கலாம் ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ் மக்களிற்கு இக்கட்டான கால கட்டத்தில் தமிழர்களின் கருத்து ஒருங்கமைக்கப்பட்ட கருத்தாக இருக்க வேண்டும். உண்மையான இனத்தின் கருத்தாக அமைவதற்கு ஒன்றுகூடி ஆராய வேண்டும்.
இன்று தென்னிலங்கையில் ஏற்பட்டது போன்று இனி ஒரு நாள் தமது பிரச்சணைகளை சரியான முறைகளிலே பிரதிநிதிகள் தீர்க்காது விட்டால் இங்கும் ஒரு நாள் மக்கள் திரண்டு எழுவார்கள். அதற்கு முன்பு தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபட்டு இன்றைய சூழலிற்கு பொருத்தப்பாடாக பொது அவைக்கு வந்து செயல்பட வேண்டியது அவசியம். மாறாக தற்போதும் அமைதி காத்தால் வரலாறு மன்னிக்காது என்றனர். எனவே சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யவும் தயாராகவுள்ளோம் என்றனர்.
TL