ந.லோகதயாளன்.
யாழ்ப்பாணம், ஜூலை 19
இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாத காரணத்தால் இன்றும் 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளளனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாமல் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து தமிழர்கள் தமிழகத்தை நோக்கி தப்பிச் செல்லும் சூழலில் இன்றும் 7 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற ஏழுபேரும் திருகோணமலை மற்றும. யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனுஸ்கோடியை சென்றடைந்த 7 பேரும. தற்போது மண்டம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
TL