நாட்டின் அடுத்த பிரதமர்

0
60

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உள்ளிட்டோரின் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அக்கூட்டணியின் தலைமை நியமனம் குறித்து இந்த நாட்களில் ஆழமாக பேசப்பட்டு வருகின்றது.

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவை இதன் தலைவராக முதலில் முன்மொழியப்பட்ட போதிலும், ஒரு குழு அதனை விரும்பாத காரணத்தினால் தலைமைப் பதவி தொடர்பில் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.

இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளதாகவும் எதிர்கால அரசாங்கம் அமைப்பதில் இந்தக் கூட்டணியின் தலைவராக இருப்பவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here