Saturday, October 1, 2022
spot_img

Latest Posts

பத்திநாதன்  எந்த முடிவு எடுத்தாளும் அந்த முடிவிற்கு விட்டுக்கொடுப்பேன் சாள்ஸ் எம்.பி.

வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளரான
பத்திநாதன்  எந்த முடிவு எடுத்தாளும் நான் அந்த முடிவிற்கு விட்டுக்கொடுப்பேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் அ.பத்திநாதனின் மணி விழா நிகழ்வு மன்னார் நகரில் உள்ள ஆகாஸ் விடுதியில் இடம்பெற்றபோது அதில் பங்குகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கல்வியாளர்கள் எல்லோரிடமும் கொள்கை இருக்காது, கொள்கையாளர் பலரிடம் அனுபவம் இருக்காது அது இரண்டும் இணைந்து இருந்த அல்லது இருக்கின்றவர்களில்  அ.பத்திநாதன் முக்கியமானவர்.

2020 நாடாளுமன்றத் தேர்தலின் முன்பு நான் நேரில் சென்று தெரிவித்தேன்
நீங்கள் எந்த முடிவு எடுத்தாளும் நான் அந்த முடிவிற்கு விட்டுக்கொடுப்பேன் என்றேன்.

அதே கருத்தை இப்போதும் கூறுகின்றேன்
நீங்கள் எந்த முடிவு எடுத்தாளும் நான் அந்த முடிவிற்கு விட்டுக்கொடுப்பேன் என்றார்.
TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.