Saturday, October 1, 2022
spot_img

Latest Posts

அதிகாரிகள் அநாதைகளாக நிற்கின்றோம் என்கின்றார் சிவபாதம்.

அரசியல் அனாதைகளான இனம்  இன்று அதிகார அநாதைகளாகவும்  நிற்கின்றோம் என வடக்கின் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்
சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் அ.பத்திநாதனின் மணி விழாவும் பத்தியின் பாதையில் மலர் வெளியீட்டு  நிகழ்வும்  மன்னார் நகரில் உள்ள ஆகாஸ் விடுதியில் இடம்பெற்றபோது அதில் வடக்கு மாகாண நிர்ர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில்  பங்குகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும. உரையாற்றுகையில்,

அரசியல் அனாதைகளாக நிற்கும் நாம்  இன்று அதிகாரிகள்  அநாதைகளாகவும்  நிற்கின்றோம்

ஏனெனில் இத்தனை ஆண்டுகள் துவிச்சக்கர வண்டியிலும், படகிலும், கால்நடையாகவும் சென்று பணியாற்றியவர்கள் இன்று ஊழல்வாதிகளாம். இந்த ஒற்றை வசணத்தில்  தூக்கி எறியும் எம்மை யாரும்  கேட்பார் இல்லை.

இதற்கும் அப்பால் எமக்கு சிங்களம் தெரியாது.  அதிகாரிகளிற்கோ தமிழ் தெரியாது. இதனால் என்ன நடக்கின்றது என்பது மக்களிற்கு தெரியாது.

அரசியல்வாதிகள் இல்லாதபோதே திறமாக செய்யப்பட்ட நிர்வாகம் இன்று அரசியல்வாதிகள் இருந்தும் தட்டிக் கேட்க முடியவில்லை.

வடக்கின் செயலாளர்கள் செய்த பிழை என்ன என கடிதம்கூட இன்றி தூக்கி எறியப்படுகின்றனர்.

இவற்றை விரிவாக கூறினால்  எனக்கும் என்ன கடிதம் மேசையில் இருக்குமோ தெரியாது என்றார்.
TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.