Tuesday, December 6, 2022

Latest Posts

யாழ்ப்பாணம் மாநகரசபை யப்பான் மாநகர சபையா ?.

யாழ்ப்பாணத்தில் இருப்பது யாழ். மாநகர சபையா அல்லது யப்பான் மாநகர சபையா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளில் சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றபோதே அனைத்துக் கட்சி  உறுப்பினர்களும்  வெளிநடப்புச் செய்தனர்.

இவ்வாறு உறுப்பினர்கள் வெளியேறியதையடுத்து போதிய கோரம் இல்லாத காரணத்தினால் சபை அமர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஜப்பானியத் தூதரகத்தினால் அன்பளிப்புச் செய்யப்படவிருந்த நவீன திண்மக் கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக  அவ் வாகனங்களின் தீர்வை மற்றும் இதர செலவுகளுக்காக ஜப்பானியத் தூதரகத்தினால் யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்ட ரூபா 14 மில்லியனைத் திரும்பச் செலுத்துவது தொடர்பில், மாநகர சபைக்குத் தெரியப்படுத்தாமல் “பணத்தைத் திரும்பச் செலுத்த முடிவு செய்துள்ளோம்” என சபை சார்பில் ஆணையாளர் அனுப்பிய கடிதம் தொடர்பான சர்ச்சையை அடுத்து உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் மூடுமந்திரமாக சபை நடாத்தப்படுவதைக் கண்டத்தே உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியாது முதல்வரும் ஆணையாளரும் எதேச்சையாக ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபா தொடர்பில் முடிவெடுத்தமையை கண்டித்த உறுப்பினர்கள் இது தொடர்பில் சபையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனப் பலமுறை கோரியும் முதல்வர் அதனை ஏறகாது ஏனைய விளக்கம் அளிக்கவே முற்பட்டார். இதனை ஏறக மறுத்தே உறுப்பினர்கள்  சபையில் இருந்து வெளி நடப்புச் செய்தனர்.

இதன்போது பதிலளித்து வந்த முதல்வர் இந்த கடிதத்தை யப்பாணியத் தூதரகமே தட்டச்சு செய்து ஒப்பமிட்டு அனுப்புமாறு மெயிலில் அனுப்பியதாக பதிலளித்தபோது இது யப்பானிய மாநகர சபையா அல்லது யாழ்ப்பாணம் மாநகர சபையா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதனபோது முதல்வர் மற்றும் பிரதி முதல்வருக்கும் இடையில் கடும் வாய்த் தர்க்கமும் ஏறபட்டது. இதன்போது முதல்வர் தான. நாட்டில் இல்லாத காலத்தில் தன்னை தகுதியற்றவர் என்ற தொணியில் கடிதம. எழுதியுள்ளதாக குறிப்பிட்டபோது உங்களது இரண்டு வருட காலத்தில் இதறகு ஓர் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுத் தாங்கோ என அமைச்சர. டக்ளஸ் தேவானந்தாவிற்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு ஏதும் ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள் என பிரதி முதல்வர் சவால் விடுத்தார்.
TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.