Tuesday, December 6, 2022

Latest Posts

யாழ்ப்பாணத்தில் வாகன விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்?

நடராசா லோகதயாளன்.

யாழில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் மாதம் ஒன்றிற்கு 5ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக  வைத்தியசாலை தரவுகள் உறுதிசெய்கின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  கடந்த 12 ஆண்டுகள்  இடம்பெற்ற விபத்துக்களின் காரணமாக 26 ஆயிரத்து 188 பேர் காயமடைந்து 623 பேர் மரணமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வாறு  அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்து , விதிமுறை மீறிய பயணம்  உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் 2010 முதல் 2021 ஆம் ஆண்டு வரையான 12 ஆண்டு காலப் பகுதியிலேயே இந்த 28  ஆயிரத்து 188  பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களிலேயே  623 பேர் மரணமடைந்தும் உள்ளதாகவும் யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் 2010ற்கு  முந்திய 9  ஆண்டுகளான 2001 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 9 ஆயிரத்து 556 பேர் படுகாயமடைய 163பேர் மட்டுமே  மரணமடைந்துள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபர தரவுகள் உறுதி செய்கின்றது.

இவற்றின் அடிப்படையில் முதல் 10 ஆண்டுகளினை விடவும் இரண்டாம் 10 ஆண்டில் காயமடைந்தோர் எண்ணிக்கை 250 விகித்த்தினை விட அதிகமாக காணப்படுகின்றது.  அத்தோடு மரணம் அடைவோர் தொகை 280 விகிதம் அதிகரித்துள்ளதாகவும்  கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு காணப்படும் வீதி விபத்துக்கள் மரணங்களில் இறுதி இரண்டு ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டு 257 பேர் காயமடைந்து 46 பேர் மரணமடைந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மிக அதிகரித்து ஆயிரத்து 604 பேர் காயமடைய 80 பேர் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் புள்ளிவபரம் உறுதி செய்கின்றது.

இவ்வாறு 2020 ஆம் ஆண்டினை விட 2021 ஆம. ஆண்டு விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புக்கள் அதிகரித்தமைக்கான காரணம் என்ன என போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளரான மருத்துவர் யமுனானந்தாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

வீதி விபத்துக்கள் அதிகரித்த வாகனங்கள் முதல் பல்வேறு காரணங்களால் இடம்மெற்றபோதும் உண்மையில் 2020ஆம் ஆண்டினை விட 2021 ஆம் ஆண்டில் விபத்துக்கள் அதிகரிக்கவில்லை. மாறாக 2020ஆம் ஆண்டு விபத்துகள் குறைவடைந்தன என்பதே உணமையாகும். ஏனெனில் 2020 ஆம் ஆண்டு அதிகரித்த கொரோனா காரணமாக ஊரங்கு சட்டம் மற்றும் நடமாட்ட முடக்கம் அமுல் இருந்தமையினால் வாகனங்கள் பயணிக்கவில்லை அதனால் விபத்துக்கள் ஏற்படவில்லை என்றார்.

இவை அனைத்தும் போரின் பின்பு அமைக்கப்பட்ட வேகப் பாதைகள் மற்றும் அதி நவீண ரக வாகனங்களின் அதிகரிப்போடு வீட்டிற்கு இரண்டிற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் பாவனையே முக்கிய காரணமாக இருப்பதோடு இன்று உத்தியோகத்தர்கள் அன்றி சாதரண தினக்கூலி பணியாளர்வரை மோட்டார் சைக்கில் பாவனை என்பதனவே காரணம் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.

இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் வரி செலுத்தும் தரவுகளின் அடிப்படையில் இன்று  7 லட்சம் மக்கள் வாழும் சூழலில்  ஒரு லட்சத்து 36 ஆயிரத்து  327 மோட்டார் சைக்கிள் உள்ளமை உறுதி செய்யப்படுகின்றது. இதேநேரம் முச்சக்கர வண்டிகள்  13 ஆயிரத்து 599 உள்ளதோடு 6 ஆயிரத்து 18 கார் மற்றும் சிறு வான்கள் உள்ளது.

இதேபோன்று ஏனைய வாகனங்கள் உட்பட குடாநாட்டில் மட்டும் இன்று பதிவு செய்யப்பட்டவையாக ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 344 வாகனங்கள் உள்ளமை கண்டுகொள்ளப்பட்டுள்ளது.

இதேநேரம் குடாநாட்டு வீதிகளில் பயணிக்கும் அதிக டிப்பர் வண்டிகள, பேரூந்துகள் மற்றும் லீசிங்கில் இருக்கும் வாகனங்கள் அனைத்தும் அந்த நிறுவனங்கள் உள்ள தெற்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதனால் இந்த எண்ணிக்கையில் உள் அடங்கவில்லை எனபதோடு குடாநாட்டில் உள்ள பல ஆயிரம் படையினர் மற்றும் பொலிசாரின் பாவனையில் உள்ள வாகனங்களும் வடக்கு மாகாணப் பதிவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இவ்வாறான வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த என்னதான் தீர்வு என மாவட்டத்தின் மூத்த பொறியியலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான வாகனம் நின்ற காலத்தில் அமைத்த வீதிகள் இன்று 2 லட்சத்தையும் தாண்டிய வாகன நெரிசல் மற்றும் கடரக வாகன அதிகரிப்பு பிரதான காரணமாக உள்ளதனால் வீதிகள் அகலிக்கப்பட்டாலே விபத்தினை குறைக்க முடியும் அல்லது ஒரு வழிப் பாதைகள் மூலமோ குறித்த வாகனத் தடை மூலம் மட்டுமே எதிர்காலத்தில் விபத்தினை தடுக்க முடியும்.

இதேநேரம் வீதி அகலிப்பு என்பதும் தற்போதைக்கு சாத்தியமில்லை அதாவது ஒரு பரப்பு காணி நகரில் லட்சத்தை தாண்டி கோடியை எட்டிவிட்டது. அதனால் மக்கள் நிலத்தை விட்டுக்கொடுக்கத் தயார் இல்லை. அதே நேரம் உணவுக்கும் மருந்துக்குமே காசு இல்லாத அரசும் நிலத்திற்கு பணம் வழங்க மாட்டாது என்றார்.
TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.