சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் விவசாய பீடத்திற்கும் சீனாவிற்கும் இடையில் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
வடக்கின் வளமான நிலங்களை அபகரிக்கும் வகையில் சீனாவின் இந்த திட்ட ஒப்பந்தம் அமையலாம் என கருதுவதால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதற்கு உடன்பட தற்போது மறுத்துள்ளது.
இதேவேளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட யாழ்ப்பாணம் பலகலைக் கழக நிர்வாகம் மறுத்தமைக்காக யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் துணை வேந்தருக்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளது.
TL