இலங்கையிலுள்ள தமது சகோதர உறவுகளுக்காக இந்திய மக்களிடமிருந்து தம்ம தானம்! அதி வணக்கத்துக்குரிய சங்கமித்தை தேரி அவர்களின் இலங்கை விஜயத்தை குறிக்கும் முகமாக ஜாதக கதைகளின் ஒலிவடிவிலான சிங்கள நூலின் இரண்டாவது தொகுதி கொழும்பில் நேற்றையதினம் வெளியிடப்பட்டது.
கட்புலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்நூலானது “நன்னெறி” என்ற கருப்பொருளில் 50 ஜாதகக் கதைகளைக் கொண்டுள்ளது.
இதேவேளை, பௌத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட சர்வதேச வினா விடைப்போட்டியில் வெற்றியீட்டி இந்தியாவிலுள்ள பௌத்த தலங்களுக்கு விஜயம்மேற்கொண்டு நாடுதிரும்பியவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது பெறுமதிமிக்க அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.


AR