இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட 2 ஆயிரம் கிலோ மஞ்சள் தமிழக பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேதாளைப் பகுதியூடாக இலங்கைக்கு உரம், மஞ்சள், கடலட்டை போன்றவை இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவது கிடைத்த முறைப்பாட்டினையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சகிதம் மண்டபம் வேதாளை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது அந்த வழியே சென்ற மகேந்திரா வான் ஒன்றை வழிமறித்தபோது அந்த வான் நிற்காமல் வேதாளையை நோக்கி சென்றபோது அதனை துரத்தி சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் வானை நிறுத்தியபோது வாகனத்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் இதவியாளர் தப்பி ஓடினர்.
இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த வாகனத்தில் இருந்த இரண்டாயிரம் கிலோ சமையல் மஞ்சளை கைப்பற்றி வாகனத்தை உழவு இயந்திரம் மூலம் கட்டி ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
TL