1150 x 80 px
அழுதால் மின்சாரம்! – விஞ்ஞானிகளின் புதிய கண்டு பிடிப்பு

கண்ணீர் மற்றும் உமிழ்நீரில் இருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் ஓர் ஆச்சரிய கண்டுபிடிப்பினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்ணீர் மற்றும் உமிழ்நீரில் காணப்படும் Lysozyme எனப்படும் பதார்த்தம் மூலமாகவே இந்த வகையில் மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என அயர்லாந்து Limerick பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பதார்த்தம் பக்றீரியாக்களின் கலச்சுவரினை தகர்க்கும் தன்மை கொண்டதாகவும், அதற்கு அமுக்கம் ஒன்றினை வழங்கும் போது அதன் மூலமாக மின்சாரம் உருவாக்கப்படுகின்றது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Piezoelectricity எனப்படும் அழுத்தமின் விளைவு மூலமாகவே இந்த மின்சார உற்பத்தி செயற்பாடு நடைபெறுகின்றது.

இதுவரையிலும் அழுத்தமின் மின்னோட்டமானது ஒலி எழுப்பும் கருவிகள் மற்றும் உயரழுத்த மின்னாக்கிகள் உட்பட நுண்ணிய மின் குவியப்படுத்துதல் செயற்பாடுகளுக்கு அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது கண்ணீர் மற்றும் உமிழ்நீர் மூலமும் இந்த அழுத்தமின்னை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க ஓர் கண்டு பிடிப்பு எனக் கூறப்படுகின்றது.

Top