1150 x 80 px
விண்வெளிக்கு ஓர் சுற்றுலா : வியப்பு தரும் பயணம் இனி சாத்தியம்

சாத்தியமற்ற விடயத்தினையும் சாத்தியமாக்கிக் காட்டுவதே அறிவியல் – தொழில் நுட்பம். இதுவும் இப்படியா என நம்ப முடியாத விடயங்களைச் சாதித்து புருவங்களை உயர்த்தவைக்கும் சக்தி தொழில் நுட்பத்திற்கு உண்டு எனலாம்.

அப்படியானதோர் தொழில்நுட்பமே விண்வெளிச் சுற்றுலாப்பயணம். இதில் புதுமை என்ன என்று சிந்திப்பவர்களும் இலுக்கலாம்.. இதில் புதுமை யாதெனின் மின்தூக்கி மூலம் விண்வெளிக்கு ஒரு சுற்றுலாச் செல்வதே புதுமை.

எதிர்காலத்தில் குறைவான நேரத்தில் விண்வெளிக்கு ஓர் ஆனந்தச் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பூமியில் இருந்து ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்று வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையிலேயே ஓர் மிகப்பெரிய மின் உயர்த்தியை (Elevator) விஞ்ஞானிகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் ஆய்வுகளில் இருந்தபோது ஈர்ப்புவிசை விதிகளினால் விவாதங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் அதி நவீன கார்பன் நனோ குழாய்கள் (Carbon nanotubes) மூலமாக இந்த மின் உயர்த்தியினை உருவாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பூமியில் இருந்து சுமார் 80000 கிலோ மீற்றர்கள் உயரத்திற்கு விண்ணுக்குச் சென்று விட்டு மீண்டும் பூமியை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் படி எதிர்காலத்தில் விண்வெளிக்கு சென்றுவரும் இந்த மின் உயர்த்தியை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Top