1150 x 80 px
“ஸ்மார்ட்“ க்கு 20 நிமிடம் விடுமுறை கொடுத்தால் புள்ளிகள் வழங்கும் புதிய செயலி!

ஸ்மார்ட் போனைக் கையில் எடுத்தால் கீழே வைக்கப் பலருக்கும் மனமிருப்பதில்லை. அதனாலேயே நேரம் விரயமாவதுடன், பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் மோகத்துக்கு செயலிகளும் முக்கியக் காரணன் என்பத உண்மை.

இந்த மோகத்திலிருந்து மீண்டுவர செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘ஹோல்ட்’ எனும் பெயரிலான இந்தச் செயலி, ஸ்மார்ட் போனைக் கையில் எடுக்காமல் இருந்தால், அதற்குப் பரிசாகப் புள்ளிகள் வழங்குகிறது.

20 நிமிடம் போனைப் பயன்படுத்தாமல் இருந்தால், குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறலாம். இந்தப் புள்ளிகளைச் சேர்த்து ஒன்லைன் கொள்வனவு மற்றும் அங்காடிகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இது கல்லூரி மாணவர்களை கருத்திற்கொண்டு நோர்வேயில் உருவாக்கப்பட்டுள்ளது.

Top