1150 x 80 px
மன்­னிப்பு கேட்க வேண்­டி­ய­வர்கள் யார்?

வரவு -செலவு திட்ட விவா­தங்­களின் போது மலை­யக மக்கள் தொடர்­பில் மலை­யக கட்­சி­களை சாராத பிர­தி­நி­தி­கள் பாரா­ளு­மன்றில் ஆரோக்­கியமான விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இதில் எதிர்­க்கட்சி பிர­தம கொற­டாவும் ஜே.வி.பியின் தலை­­வ­ரு­மான அனு­ர­கு­மார திசா­நா­யக்க ஆற்­றிய உரை மிக முக்­கி­ய­மா­னதும் . கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெ­ற்ற மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­­கட்­ட­­மைப்பு மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சின் மீதான வரவு -செலவு திட்ட குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்­றிய அனுர குமார, மலை­யக மக்­களின் தற்­போ­தைய மோச­மான நிலை­மைக்கு ஆட்­சி­யாளர்கள் மன்­னிப்பு கோர வேண்டும் என்­ப­துடன் யாழ் நூலகம் எரி­யூட்­டப்­பட்­ட­தற்கு பிர­தமர் சபையில் எவ்­வாறு மன்­னிப்பு கேட்­டா­ரோ அது போன்று மலை­யக மக்­க­ளி­டமும் மன்­னிப்பு கோர வேண்டும் என அதிர­டி­யாக குறிப்­பிட்டார். 

அதற்கு அவர் முன்­வைத்த கார­ணங்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வை­­க­ளா­கவே இருந்­த­ன. 180 வரு­டங்­க­ளுக்கும் மேலாக நாட்டில் தேசிய வரு­மா­னத்தை உற்­பத்தி செய்­வதில் பாரிய பங்­கை இவர்கள் வகித்து வரு­கின்­றனர். ஆடைத்­தொழிற் துறை ஆரம்­பிக்க முன்­னரே தேயி­லைத்­தொ­ழிற்­றுறை தேசிய வரு­மா­னத்தில் முக்கிய இடத்­தைப்­பி­டித்­தது. இத்­த­கைய பங்­க­ளிப்­பு­களை செய்­தி­ருக்கும் இந்த மக்­களை இந்த நாட்டின் பிர­­ஜை­க­ளாக கருதி அவர்­களின் அடிப்­படை தேவை­களை பூர்த்தி செய்­தி­ரு­க்­கின்­றோமா என்று கேள்வி எழுப்­பி­ய­துடன் தோட்­டப்­ப­குதி மக்­களின் வாழ்க்­கையை உயர்த்­து­வ­தற்கு அதே சமூ­கத்­தி­லி­ருந்து வந்த தோட்­டத்­த­லை­மை­களே எதிர்ப்­பாக இருந்­தனர். தத்­த­மது சுய­ந­லன்­க­ளுக்­கா­கவே தொழி­லா­ளர்­களை அவர்கள் பயன்­­ப­டுத்­திக்­கொண்­டனர். ஆகவே 180 வரு­டங்­க­ளாக இந்த மக்­க­ளுக்கு ஏற்­பட்டு வரும் பேரனர்த்­தங்­க­ளுக்கு இந்த நாட்டின் ஆட்­சி­யா­ளர்கள் பொறுப்பு கூற வேண்டும் என்­ப­தோடு பிர­தமர் மன்­னிப்பு கோர வேண்டும் என அவர் உரை­யாற்­றி­யி­ருந்தார். 

மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் வாழ்க்­கைக்கு அந்த சமூ­கத்தின் தலை­வர்­களே காரணம் என்­பதை அழுத்தம் திருத்­த­மாக அவர் கூறி அமர்ந்த போதும் அதை எதிர்த்து ஒரு வார்த்­தை­யேனும் பேசு­வ­தற்கு அன்று சபைக்கு வருகை தந்­தி­ருந்த மலை­யக பிர­தி­நி­தி­களால் முடி­யாது போயிற்று. ஏனெனில் உண்­மை­யான வர­லாற்று சம்­ப­வத்­தையே அனுர குமார கூறி­யி­ரு­ந்தார். ஆங்­கி­லேயர் ஆட்சி காலத்­தி­லி­ருந்து இந்­நாட்­டிற்கு உழைக்கும் மக்­க­ளாக வருகை தந்த பெருந்­தோட்ட மக்கள் இன்று வரை உழைத்­துக்­கொண்டே இருக்­கின்­றனர். பிரித்­தா­னியர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த லயன் குடி­யி­ருப்­பு­களில் இன்னும் இலட்­சத்­திற்கும் மேற்­பட்டோர் வாழ்ந்து வரு­கின்­றனர்.

இவர்­களை இதி­லி­ருந்து விடு­விக்க எந்த அர­சியல் தலை­மை­க­ளாலும் முடி­ய­வில்லை. ஆனாலும் இந்த சமூகம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்­தைப்­பெற்று 40 வரு­டங்கள் நெருங்­கு­கின்­றன. அனுரகுமார கூறி­யது போல் இந்த மக்­களை தமது சுய­லா­பத்­திற்­காக பயன்­ப­டுத்­திக்­கொண்ட தலை­மை­களின் வாழ்க்கை நிலை­மையோ நினைத்­துப்­பார்க்க முடி­யாத அள­விற்கு மாறி விட்­டது. சாதாரண பிர­தேச சபை உறுப்­பினர்கள் கூட இன்று வீடு வாகனம் என்ற செல்­வத்தில் வாழ்­கின்­றனர். இதில் மாகாண சபை உறுப்­பி­னர்கள், எம்.பிக்கள், அமைச்­சர்­களின் நிலைமை பற்றி சொல்ல வேண்­டி­ய­தில்லை.

இந்த மக்­க­ளுக்கு அர­சாங்­கத்தால் ஒதுக்­கப்­படும் அபி­வி­ருத்­தித்திட்ட நிதிகள் இதே சமூ­கத்­தி­லி­ருந்து உரு­வான அரசாங்க அதி­கா­ரி­க­ளினால் விழுங்கி ஏப்பம் விடப்­பட்டு வருகின்­­ற­ன. பாட­சா­லை­களில் கல்­வி போதிக்­காது சம்­­ப­ளத்தை மட்டும் பெற்­றுக்­கொண்டு உப தொழில்கள் செய்யும் ஆசி­ரி­யர்கள் இன்று மலைய­கத்தில் பெரு­கி­யுள்­ளனர். அர­சாங்­கத்தால் வழங்­கப்­ப­டும் போஷாக்­கு­ணவு திட்ட நிதி­யி­லி­ருந்து ஏனைய வளங்­களை சுருட்டி ஏப்பம் விடும் அதி­பர்­களும் தார­ா­ள­மாக இன்று இருக்கின்­றனர். இப்­ப­டி நிலை­­மைகள் இருக்கும் போது அர­சியல் பிர­தி­நி­தி­க­ளி­லி­ருந்து , அர­சாங்க அதி­கா­ரிகள் ஆசி­ரி­யர்கள் ,அதி­பர்கள் என பல தரப்­பி­னரும் தாம் செய்து வரும் துரோ­கத்­த­னங்­க­ளுக்கு இந்த மக்­க­ளிடம் மன்­னிப்பு கோர வேண்­டி­யுள்­ள­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இந்த நிலை­யில் பிர­­தமர் மட்டும் மன்­னிப்பு கேட்­பதில் என்ன தான் நடந்து விடப்­போகின்றது?

நன்றி- சூரியகாந்தி 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top