1150 x 80 px
ஜெனீவா கால அவகாசம்

ஜெனீவாவில் அடுத்­த­வாரம் கூட­வி­ருக் கும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொ­டரில், ‘கால­அ­வ­காசம்’ கோரு­வ­தற்­கான முயற்­சி­களில் அர­ சாங்கம் இறங்­கி­யி­ருக்­கின்­றது. கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைத் தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கே, அர­சாங்கம் மேலும் கால­அ­வ­காசம் கோர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­ கள சம­ர­வீர கூறி­யி­ருந்தார். 

எனினும், எவ்­வ­ளவு கால­அ­வ­கா­சத்தை அர­சாங்கம் கோர­வுள்­ளது என்ற தக­வலை அவர் வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை. ஆனால், 18 மாத கால­அ­வ­காசம் கோரு­வ­தற்கு வாய்ப்­புகள் இருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

இந்தச் சூழலில், கடந்த திங்­கட்­கி­ழமை, ஜெனீ­வாவில் நடந்த ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் அடுத்த கூட்­டத்­தொ­ட­ருக்­கான ஒழுங்­க­மைப்புக் கூட்­டத்தில், இலங்கை தொடர்­பான தீர்­மா­னத்தை தாம் முன்­வைக்­க­வி­ருப்­ப­தாக பிரித்­தா­னியா அறி­வித்­தி­ருக்­கி­றது.

கடந்த 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்தின் தொடர்ச்­சி­யா­கவும், அதன் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கால­அ­வ­கா­சத்தை வழங்கும் வகை­யிலும் இந்தத் தீர்­மா­னத்தை முன்­வைக்க பிரித்­தா­னியா தயா­ரா­கி­யி­ருக்­கி­றது.

இந்தச் சூழலில் தான், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அவ்­வாறு கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்டால், அதற்கு கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனே பொறுப்­பேற்க வேண்டும் என்றும், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் கூறி­யி­ருந்தார்.

இப்­போது, யார் எதைச் செய்­தாலும், சம்­பந்­தனே அதற்குப் பொறுப்பு என்று குற்­றம்­சாட்டும் ஒரு பாணி தமிழ் அர­சியல் சூழலில் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. காணா­மல்­போ­ன­வர்கள் விவ­கா­ரத்­தி­லா­யினும், அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்­தி­லா­யினும், காணிகள் விடு­விப்பு விவ­கா­ரத்­தி­லா­யினும் சம்­பந்தன் மீது குற்­றம்­சாட்­டு­வது, அவ­ருக்கு எதி­ரான தரப்­பி­ன­ருக்கு ஒரு நோயா­கவே மாறி­யி­ருக்­கி­றது.

அதன் நீட்­சி­யாகத் தான், ஐ.நாவில் கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்டால் அதற்கும் சம்­பந்­தனே பொறுப்பு என்று, கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் போன்­ற­வர்கள் குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்­றனர்.

ஆனால் மேற்­கூ­றப்­பட்ட விவ­கா­ரங்­களில், தமிழ் மக்­களின் தரப்பை பிர­தி­நி­தித்­துவம் செய்­ப­வ­ராக மாத்­திரம் சம்­பந்தன் இருக்­கி­றாரே தவிர, முடி­வு­களை எடுக்கும் அதி­கா­ரத்தில் அவர் இல்லை என்­பதை எல்­லோரும் வச­தி­யாக மறந்து விடு­கின்­றனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக எல்­லா­வற்­றையும் அர­சி­ய­லாக்­கு­வதில் தான், அவர்கள் கவனம் செலுத்­து­கின்­றனர்.  

இந்த உள்­வீட்டுச் சண்­டையை வெளித்­த­ரப்பு பயன்­ப­டுத்திக் கொள்­வது பற்றி, கூட்­ட­மைப்போ அல்­லது கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அர­சியல் நடத்­து­ப­வர்­களோ கண்­டு­கொள்­வ­தில்லை. ஜெனீ­வாவில் இலங்கை அர­சாங்கம் கால­அ­வ­கா­சத்தைக் கோரப் போகி­றது என்­பது உண்மை. ஆனால், இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­கா­சத்தை அர­சாங்கம் கோரு­வ­தற்கு வாய்ப்­புகள் இருக்­கி­றதா என்­பது சந்­தேகம். 

ஏற்­க­னவே, இலங்கை அர­சாங்­கத்­துக்கு 2015 ஒக்­டோபர் தொடக்கம், ஒன்­றரை ஆண்­டுகள் கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. (அது வரை­ய­றுக்­கப்­ப­டாத கால­அ­வ­காசம்) எனவே பொறுப்­புக்­கூ­றல்­தொ­டர்­பான வாக்­கு­று­தியை நிறை­வேற்ற இரண்டு ஆண்டு கால­அ­வ­கா­சத்தை அர சாங்கம் கோரு­வ­தற்கு வாய்ப்­புகள் குறைவு.  

அவ்­வா­றான கோரிக்கை விடுக்­கப்­பட்டால் அதனை இழுத்­த­டிக்கும் உத்­தி­யா­கவே சர்­வ­தேசம் கருதும். எனவே முடிந்த வரைக்கும் கால­அ­வ­கா­சத்தை வரை­யறை செய்த ஒன்­றாக அர­சாங்கம் கோராது. திறந்த கால­அ­வ­கா­சத்தைக் கோரினால், அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும் வரை­ய­றைகள் இருக்­காது.

அதே­வேளை, இலங்கை கால­அ­வ­கா­சத்தைக் கோரும் போது, எவ்­வ­ளவு காலம் தேவை என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடுகள் முயற்­சிக்­கலாம்.அந்தக் கட்­டத்தில் தான், இலங்­கைக்கு வழங்­கப்­படும் கால­அ­வ­கா­சத்தின் எல்லை தீர்­மா­னிக்­கப்­படும் வாய்ப்­புகள் இருக்­கின்­றன. 

இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் கோரப்­ப­ட­வுள்­ளதே, என்று எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்­துள்ள இரா.சம்­பந்தன், பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரங்­க­ளுக்குப் பதி­ல­ளிப்­பதில் அர­சாங்கம் மெத்­தனப் போக்கில் இருப்­ப­தா­கவும், இது தமிழ் மக்­க­ளுக்கு அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்றும் கூறி­யி­ருந்தார். அத்­துடன், கால­அ­வ­காசம் வழங்­கு­வ­தாயின், சர்­வ­தேச கண்­கா­ணிப்­பு­ட­னேயே அது இடம்­பெற வேண்டும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்த இடத்தில், அவர் கால­அ­வ­காசம் வழங்­கப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­த­வில்லை. ஆனால், சர்­வ­தேச கண்­கா­ணிப்­புடன் இலங்­கைக்கு கால­அ­வ­காசம் வழங்க வேண்டும் என்று சம்­பந்தன் கூறி­யது போல அவ­ரது கருத்து இப்­போது ஊட­கங்­களில் திரி­ப­டைந்­துள்­ளது.

அதே­வேளை, இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் வழங்­கப்­ப­டு­வதை தாம் எதிர்ப்­ப­தா­கவும், கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்டால், தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை சர்­வ­தேசம் மறந்து விடும் என்றும் அச்­சத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன். 

இலங்கை அர­சாங்கம் கால­அ­வ­கா­சத்தைக் கோரு­வதை மையப்­ப­டுத்தி, தமிழர் தரப்பில் இத்­த­கைய கருத்­துக்கள் வெளி­வந்­தி­ருக்­கின்ற போது, யதார்த்தம் என்ற ஒன்றை எல்­லோரும் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ள­வில்லை.

அது தான், இலங்கை கேட்டுக் கொண்­டாலும் சரி, கேட்டுக் கொள்­ளா­வி­டினும் சரி, சர்­வ­தேச சமூகம் வழங்கப் போகிற வாய்ப்பு. ஜெனீவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த ஏற்­க­னவே ஒன்­றரை ஆண்­டுகள் கால­அ­வ­காசம் இருந்­தது, அதனை அர­சாங்கம் சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. இந்­த­நி­லையில், இலங்­கைக்கு மேல­திக கால­அ­வ­கா­சத்தை வழங்­கு­வதை விட, வேறொரு தெரிவு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு இருக்­கி­றதா என்று பார்க்க வேண்டும். 

இப்­போ­தைய நிலையில், இலங்கை அர­சாங்­கத்­துடன் இணங்கிச் சென்று பொறுப்­புக்­கூறல் உள்­ளிட்ட பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தையே, ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேரவை விரும்பும்.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தைப் போல, இந்த அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துடன் முரண்டு பிடிக்­க­வில்லை. எனவே, இலங்­கையின் கோரிக்­கையைத் தட்டிக் கழித்துக் கொண்டு, அடுத்த கட்டம் பற்றிச் சிந்­திக்க முடி­யாது. இலங்கை அர­சாங்­கத்­துடன் இணைந்தே செயற்­ப­டு­வ­தற்கே முனையும். அதை­விட, 2015இல் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில், எந்த இடத்­தி­லுமே இலங்­கைக்கு இந்தப் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான காலக்­கெடு எதுவும் விதிக்­கப்­ப­ட­வில்லை. இதனை, ஏற்­க­னவே ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் செயிட் ராட் அல் ஹுசேனும் கூறி­யி­ருக்­கிறார்.

இந்­த­நி­லையில், குறிக்­கப்­பட்ட காலத்­துக்குள் ஏன் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­ற­வில்லை என்று, இலங்­கையின் கழுத்தைப் பிடிக்க முடி­யாது. அடுத்த கட்­டத்­துக்கு செல்லப் போகிறோம் என்று கூறி­வி­டவும் முடி­யாது,

அவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­பட்டால், எந்தக் காலக்­கெ­டுவும் விதிக்­கப்­ப­ட­வில்லை என்­பதை இலங்கை சுட்­டிக்­காட்டும், தீர்­மா­னத்தின் ஏனைய பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­களை எடுத்­துக்­கூறும். அது­பற்றி ஐ.நா. அறிக்­கை­யா­ளர்கள் சமர்ப்­பித்த அறிக்­கை­க­ளையும் தூக்கிப் போடும். இத்­த­கைய நிலையில், மீண்டும் கால­அ­வ­காசம் ஒன்றை வழங்கும் முடிவை ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை எடுத்­தே­யாக வேண்­டிய நிலை ஏற்­படும். 

மாறாக, குறித்த கால­அ­வ­கா­சத்­துக்குள் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை அமைக்­க­வில்லை என்ற கார­ணத்­துக்­காக, ஒரு சுதந்­திர போர்க்­குற்ற விசா­ரணைப் பொறி­மு­றையை ஜெனீவா உரு­வாக்கி விடாது. அதற்­கான வாய்ப்­பு­களும் சூழலும் ஜெனீ­வாவில் இல்லை என்­பது தெரிந்த விடயம் தான். இந்த நிலையில் தான் மீண்டும் இலங்­கைக்குக் கால அவ­கா­சத்தை வழங்கி ஒரு புதிய தீர்­மா­னத்தை முன்­வைக்க பிரித்­தா­னியா தயா­ரா­கி­றது. 

அமெ­ரிக்­காவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர், இலங்கை தொடர்­பான தெளி­வான ஒரு நிலைப்­பா­டுகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. எனவே, இந்­த­முறை, ஜெனீ­வாவில் அமெ­ரிக்­காவின் செல்­வாக்கோ தலை­யீ­டு­களோ அதிகம் இருக்­காது.

இதனால் தான், பிரித்­தா­னி­யாவை முன்­வைத்து, இந்த தீர்­மா­னத்தை கொண்டு வரும் முயற்­சிகள் நடக்­கின்­றன. இதில் இந்­தி­யாவின் ஆத­ரவை கோரு­வ­தற்கும் அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. அமெ­ரிக்­காவின் வலு­வான ஆத­ர­வில்­லாமல், பிரித்­தா­னி­யாவின் தலை­மையில் இலங்­கைக்கு எதி­ராக ஒரு தீர்­மானம் கொண்டு வந்து நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் குறைவு. இலங்கை அர­சாங்கம் இப்­போது சர்­வ­தேச ஆத­ரவை அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.  

எனவே, வாக்­கு­று­தியை நிறை­வேற்­ற­வில்லை என்று இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தை ஐரோப்­பிய நாடுகள் முன்­வைத்தால் கூட,2009 இல் கூட்­டப்­பட்ட சிறப்புக் கூட்­டத்தில், ஏற்­பட்ட நிலை தான் ஏற்படும். அத்தகையதொரு நிலைக்குச் செல்ல விடாமல், இலங்கைக்குக் கடிவாளம் போடுவதற்கு காலஅவகாசம் ஒன்றை வழங்குவதே சிறந்தது என்றே பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கும். 

இலங்கை அரசாங்கத்தை தமது கைகளுக்குள் வைத்துக் கொள்வதற்கே மேற்குலகம் பிரதான கவனத்தைச் செலுத்தும். இது சர்வதேச அரசியல் சூழல். இதனை யாரும் கவனத்தில் கொள்ளவதாகத் தெரியவில்லை.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களின் அடிப்படை நோக்கம், தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதல்ல. இலங்கைக்கு கடிவாளம் போடும் எத்தனமே அங்கு நடந்து கொண்டிருந்தது, இப்போதும் அது தான் நடக்கப் போகிறது. இந்த நிலையில், ஜெனீவா தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் சக்தி தமிழர் தரப்பிடம் முன்னரும் இருக்கவில்லை. இப்போதும் இருக்கவில்லை.  

காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில் தலையிடும் அல்லது முடிவை மாற்றும் அதிகாரம் தமிழர் தரப்பிடம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால், தமிழர் தரப்பு இங்கு வெறும் பார்வையாளர்கள் தான்.

-என்.கண்ணன்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top