1150 x 80 px
அரசாங்கத்தின் தந்திரோபாயம்

பொறுப்பு கூறுவதற்காக மேலும் கால அவகாசம் தேவை என கோருவது பிரச்சினைகளை மழுங்கடித்து, அவற்றுக்கான தீர்வுகளை இல்லாமற் செய்வதற்கான தந்திரோபாயச் செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது. அரசாங்கம் கோருகின்ற கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்குவதாக இருந்தால், அந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­திலும், போர்க்­காலச் செயற்­பா­டு­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­திலும் நல்­லாட்சி அர­சாங்கம் உறு­தி­யா­கவும் உண்­மை­யா­கவும் செயற்­படும் என்று எதிர்­பார்த்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் நம்­பிக்­கையில் இப்­போது தளர்வு ஏற்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

இந்தத் தளர்­வா­னது, போர்க்­குற்றச் செயல்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­வதன் மூலம் யுத்த மோதல்­களின் போது பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி கிடைக்கும், புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் ஓர் அர­சியல் தீர்வு எட்­டப்­படும் என்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனின் எதிர்­பார்ப்­புக்­களை ஆட்டம் காணச் செய்­தி­ருப்­ப­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

கடந்து போன 2016 ஆம் ஆண்டு இறு­திக்குள் நல்­லாட்­சியின் கீழ் ஓர் அர­சியல் தீர்வை எட்­டி­விட முடியும் என அவர் ஆழ­மான நம்­பிக்­கையைக் கொண்­டி­ருந்தார். அந்த வகையில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்று தமிழ் மக்­க­ளுக்கு ஊட்­டப்­பட்­டி­ருந்த அர­சியல் ரீதி­யான நம்­பிக்கை, எதிர்­பார்க்­கப்­பட்ட வகையில் நிறை­வே­ற­வில்லை. அவ்­வாறு நிறை­வே­று­வ­தற்­கு­ரிய, தெளி­வான - சாத­க­மான அர­சியல் நிலை­மை­களும் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அந்த விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்ட விதமும், விசா­ர­ணை­களில் உண்­மையைக் கண்­ட­றி­வ­தாகப் பாவனை செய்து கேட்­கப்­பட்ட கேள்­வி­களும், விசா­ர­ணை­யா­ளர்கள் நடந்து கொண்ட முறையும் நீதி வழங்­கு­வ­திலும் பார்க்க நடை­பெற்ற விட­யங்­களை மூடி மறைப்­ப­தற்­கான ஒரு முயற்­சி­யையே இனம் காட்­டி­யி­ருந்­தது.

ஏமாற்­ற­ம­ளித்­துள்ள விசா­ரணை நடை­முறை அனு­ப­வத்தைப் பெற்­றுள்ள பாதிக்­கப்­பட்ட மக்­க­ளும்­சரி, அவர்­க­ளுக்­காகச் செயற்­ப­டு­கின்­ற­வர்­க­ளும்­சரி, பொறுப்பு கூறு­வ­தற்­காக அர­சாங்கம் கால அவ­காசம் கோரு­வதை நியா­ய­மா­ன­தொரு நட­வ­டிக்­கை­யாக ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். அந்த வகை­யி­லேயே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும், கால அவ­காசம் கோரு­வ­தற்­கான அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கையை நம்­பிக்­கை­யற்ற நிலை­யிலும் எரிச்­ச­ல­டைந்த வகை­யிலும் நோக்­கியி;ருக்­கின்­றது.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண, ஆக்­க­பூர்வ நட­வ­டிக்கை அவ­சியம்

பொறுப்பு கூறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு மேலும் ஒன்­றரை வருட கால அவ­காசம் அர­சாங்­கத்­திற்குத் தேவைப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. சாதா­ர­ண­மாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் ஒரு வருட கால அவ­கா­சமே வழங்­கப்­ப­டு­வது வழக்கம் என கூறப்­ப­டு­கின்­றது. வழமை அவ்­வா­றி­ருக்க அர­சாங்கம் ஒன்­றரை வருட காலத்தை அவ­கா­ச­மாகக் கோரி­யி­ருப்­பது ஏன் என்­பது தெரி­ய­வில்லை.

மேலும் கால அவ­காசம் தேவை என மொட்­டை­யாக முன்­வைக்­கப்­ப­டு­கின்ற கோரிக்­கையை மனித உரிமைகள் பேரவை நிரா­க­ரித்­தாலும் நிரா­க­ரிக்­கக்­கூடும். ஒன்­றரை வருடம் என குறிப்­பிட்டு கோரிக்கை விடுக்­கும்­போது, கடைசி ஒரு வரு­ட­மா­வது கால அவ­காசம் கிடைக்கும் என்று கணித்­துத்தான் இந்தக் கோரிக்கை எழுப்­பப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தே­கமும் எழுந்­துள்­ளது.

பொறுப்பு கூறும் விட­யத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் அர­சாங்கம் எத்­த­னையோ காரி­யங்­களைச் செய்­தி­ருக்க முடியும். ஆனால், நிறை­வேற்­றக்­கூ­டிய காரி­யங்­களைக் கூட முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் போதிய அளவில் முயற்­சிக்­க­வில்லை. நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்றே கூற வேண்­டி­யி­ருக்­கின்­றது.

முக்­கி­ய­மாக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்­கைக்கு அமை­வாக அந்தச் சட்­டத்தை நீக்­கி­யி­ருக்­கலாம். அல்­லது அதனை மறு­சீ­ர­மைத்து புதிய சட்­டத்தைக் கொண்டு வந்­தி­ருக்­கலாம். அதனை அர­சாங்கம் செய்­ய­வில்லை.

அடுத்­த­தாகப் பொது­மக்­களின் காணி­களைப் பிடித்து வைத்­துள்ள இரா­ணு­வத்­தி­னரை அவற்றில் இருந்து வெளி­யேற்றி, இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­களை மீள்­கு­டி­யேற்­றி­யி­ருக்க வேண்டும். அத­னையும் அரசு செய்­ய­வில்லை.

இரா­ணு­வத்­தி­னரால் அடக்கி ஒடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் தற்­போது முல்­லைத்­தீவில் தங்­க­ளு­டைய காணி­களை விட்டு படை­யினர் வெளி­யேற வேண்டும் எனக் கோரி போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். பொது­மக்கள் காலம் காலமாகக் குடியிருந்த காணிகளை அடாவடித்தனமாகக் கைப்பற்றி வைத்துக் கொண்டு, அந்தக் காணிகளுக்கு உரிமை கோருபவர்களிடம் அதற்கான உரிமம் இருக்கின்றதா என படையினர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

ஒரு நாட்டில் உள்ள காணிகள் இறைமையுள்ள மக்களுக்கே சொந்தமானது. அதற்கு உரிமை கோருவதற்கு அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது. ஏனெனில் இறைமை மக்களுக்கானது. அரசாங்கத்திற்கு உரியதல்ல. அரசாங்கம் அதனைப் பராமரிப்பதற்கே உரித்துடையது என்பது ஜனநாயகவாதிகளின் கருத்தாகும். அரசாங்கத்திற்கே காணிகளை உரிமை

கோர முடியாது என்றால், படையின ருடைய நிலைமையைப் பற்றி கூற வேண்டியதில்லை. எனவே காணி விடயத்தில் அரசாங்கம் செய்யக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு பின்னணியில் பொறுப்பு கூறுவதற்காக மேலும் கால அவகாசம் தேவை என கோருவது பிரச்சினைகளை மழுங்கடித்து, அவற்றுக்கான தீர்வுகளை இல்லாமற் செய்வதற்கான தந்திரோபாயச் செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது.

அரசாங்கம் கோருகின்ற கால அவகா சத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்குவதாக இருந்தால், அந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கம் ஆமை வேகத்தில் செயற்பட்டுக் கொண்டிருப்பதைப் பொறுக்கமாட்டாதவர்களாக பாதிக்கப்பட்ட மக்கள் தன்ணுணர்ச்சியில் உந்தப்பட்டு வீதிகளில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கின்ற சூழலில் அவர்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் போக்கில் வெறுமனே எரிச்சலடைந்தும், ஏமாற்றமடைந்தும் இருந்தால் மட்டும்போதாது. ஏதாவது ஒரு வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் வழியை ஏற்படுத்துவதற்குமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இது இன்றைய காலத்தின் அவசரத் தேவையாகும்.

இதனால், ஏற்­க­னவே பலரும் நம்­பிக்­கை­யற்­றி­ருந்­தனர். இருப்­பினும், சம்­பந்தன் ஆணித்­த­ர­மாகக் கூறு­கின்­றாரே, அவர் குறிப்­பி­டு­வதைப் போல சற்று பொறு­மை­யாக இருந்து பார்ப்போம் என்ற மன­நி­லை­யி­லேயே தமிழ் மக்­களும் கூட்­ட­மைப்பின் ஏனைய தலை­வர்­களும் பொறுமை காத்து எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள்.

ஆனால், மனித உரிமைகள் மீறல்­க­ளுக்கும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கும் பொறுப்பு கூறு­கின்ற விட­யத்தில் கணி­ச­மான முன்­னேற்­றத்தைக் காட்­டாமல், 2017 மார்ச் மாத மனித உரி­மைகள் பேர­வையின் அமர்வில் மேலும் ஒன்­றரை வருட கால அவ­காசம் கோரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. இதனை வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக ஆட்சி நடத்தி வரு­கின்ற நல்­லாட்சி அர­சாங்கம், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாகப் போக்கு காட்­டி­யி­ருக்­கின்­றதே தவிர, ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கத்தின் இந்தப் போக்கு, முன்­னைய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளிலும் பார்க்க ஒப்­பீட்­ட­ளவில், குறை­வா­ன­தா­கவே பாதிக்­கப்­பட்ட மக்கள் உட்­பட பல­ராலும் கரு­தப்­ப­டு­கின்­றது.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் காலம் கடத்­து­கின்ற அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்கை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை எரிச்­ச­ல­டையச் செய்­தி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை ஏமாற்­றத்­திற்கு உள்­ளாக்கி வெறுப்­ப­டையச் செய்­தி­ருக்­கின்­றது.

இந்தத் தளர்­வான நிலையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அடுத்த கட்ட நகர்வு என்­ன­வாக இருக்கப் போகின்­றது? அத்­த­கைய நகர்­வுக்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் தயா­ராக இருக்­கின்­றாரா? – என்ற கேள்­விகள் இப்­போது எழுந்­தி­ருக்­கின்­றன.

உண்மைச் சொரூபம்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோரின் கூட்­டி­ணைவின் மூலம் 2015 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை வெற்றி பெறச் செய்­வ­தற்­கான பூர்­வாங்க வேலைத்­திட்­டங்­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் முக்­கிய பங்­கேற்றுச் செயற்­பட்­டி­ருந்தார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஆகியோர் அர­சியல் ரீதி­யாக இணைந்­ததன் மூலம் நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சி­க­ளா­கிய ஐக்­கிய தேசிய கட்­சியும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து ஆட்சி அமைத்துச் செயற்­ப­டு­வ­தற்கு வழி­யேற்­பட்­டி­ருந்­தது.

இத்­த­கைய ஆட்சி மாற்­றத்தின் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண முடியும். போர்க்­குற்­றங்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்­பது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் அசைக்க முடி­யாத நம்­பிக்­கை­யாகும். அந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே அவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை, ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­க­டித்து, பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்றி பெற செய்­வ­தற்­கான முயற்­சி­களில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா ஆகி­யோ­ருடன் கைகோர்த்துச் செயற்­பட்­டி­ருந்தார்.

ஆட்சி மாற்­றத்­திற்குத் தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுத் தர முடியும் என்ற நம்­பி­க­கையை அவர்கள் இரு­வ­ருக்கும் ஊட்­டி­யி­ருந்த இரா.சம்­பந்தன், அதற்குப் பதி­லாக தமது அர­சியல் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்ற வேண்டும் என்­பதை வாய்­மொழி மூல­மான ஒப்­பு­தலை மட்­டுமே அவர்­க­ளிடம் இருந்து பெற்­றி­ருந்தார். ஆயினும் தமிழ் மக்கள் சார்பில் அவர்கள் இரு­வ­ருக்கும், நிபந்­த­னை­க­ளுடன் கூடிய வகை­யி­லான ஆத­ரவை வழங்­கி­யி­ருக்­க­வில்லை. நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வையே வழங்­கி­யி­ருந்தார்.

ஆனால் அந்த ஆத­ரவு, அவர் எதிர்­பார்த்­தி­ருந்த அர­சியல் பலா­ப­லன்­களைத் தரத் தவ­றி­யி­ருக்­கின்ற அர­சியல் யதார்த்த நிலைமை இப்­போது பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. இத­னை­ய­டுத்து, இரா.சம்­பந்தன் என்ன செய்யப் போகின்றார் என்ற கேள்வி இயல்­பா­கவே எழுந்­தி­ருக்­கின்­றது.

இந்தக் கேள்வி எழு­வ­தற்கு இரண்டு முனை­களில் வெளிப்­பட்­டுள்ள கருத்­துக்கள் முக்­கி­ய­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. இந்தக் கருத்­துக்கள் அர­சாங்­கத்தின் உண்­மை­யான நிலைப்­பாட்­டையும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் விட­யத்தில் அரசு பூட­க­மாகச் செயற்­ப­டு­கின்ற நிலை­மை­யையும் தோலு­ரித்துக் காட்­டி­யி­ருப்­ப­தா­கவே கொள்ள வேண்­டி­யி­ருக்­கின்­றது.

மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்கி, கலப்பு விசா­ரணை பொறி முறையை உரு­வாக்­கு­வது உட்­பட பல விட­யங்­களில் அந்தப் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தாக அரச ஒப்­புதல் அளித்­தி­ருந்­தது. ஆனால் அந்த உறு­தி­மொ­ழிக்கு முற்­றிலும் நேர்­மா­றாக, கலப்பு விசா­ரணை பொறி­மு­றையை உரு­வாக்க முடி­யாது. உள்­ளக விசா­ணை­க­ளையே நடத்த முடியும் என்று அதி­கா­ர­பூர்­வ­மாக அடித்துக் கூறி­யி­ருக்­கின்­றது.

மனித உரிமைகள் மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­களின் மூலம் போர்க்­குற்றச் செயல்­களைப் புரிந்­துள்ள படை­யி­னரைக் காட்டிக் கொடுப்­ப­தில்லை என்ற பேரி­ன­வாத அர­சியல் நிலைப்­பாட்­டையே இதன் மூலம் அரசு வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இந்த வெளிப்­பாட்டின் பின்­ன­ணியில் அர­சாங்கம் கொண்­டுள்ள உண்­மை­யான நிலைப்­பாட்டைத் தோலு­ரித்துக் காட்டும் வகையில் முன்னாள் ஜனா­தி­ப­தியும், தேசிய ஒற்­று­மைக்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான செய­ல­கத்தின் தலை­வி­யா­கிய சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

ஏற்­பு­டை­ய­தல்ல

புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக ஓர் அர­சியல் தீர்வை எட்ட முடியும் என்­பது அவ­ரு­டைய நிலைப்­பா­டாகும். போர்க்­குற்­றங்கள் பற்றி விசா­ரணை செய்­வ­தற்­கான நீதி­மன்­றத்தை உரு­வாக்­கு­வது குறித்து கவனம் செலுத்­தினால், அது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கு­வதைப் பாதிக்கும். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கு­வதில் ஏற்­ப­டு­கின்ற பாதிப்பு அர­சியல் தீர்­வையும் பாதிக்கும் என்ற வகையில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

அத்­துடன் பொறுப்பு கூறு­கின்ற விட­யத்தில் அர­சாங்கம் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­காக காணாமல் போனோ­ருக்­கான செய­லகம் ஒன்றை அமைத்­தி­ருக்­கின்­றது. அந்தச் செய­லகம் செயற்­ப­டும்­போது, பொறுப்பு கூற­லுக்­கான விசா­ரணை பொறி­மு­றை­யாக அமைக்க வேண்­டி­ய­தில்லை என்றும் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா கூறி­யி­ருக்­கின்றார்.

தேசிய ஒற்­று­மைக்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான செய­ல­கத்தின் தலை­வி­யாக பொறுப்­புள்ள ஒரு பதவி வகிக்­கின்ற அவ­ரு­டைய இந்தக் கருத்தை சாதா­ரண கருத்­தா­கவோ அல்­லது அர­சியல் பேச்சின் ஊடாக வெளி­வந்த ஓர் அர­சியல் ரீதி­யான பிர­சா­ரத்­துக்­கான கருத்­தா­கவோ கருதி ஒதுக்­கி­விட முடி­யாது.

ஏனெனில் நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக முன்­னின்று செயற்­பட்­ட­வர்­களில் சந்­தி­ரிகா முக்­கி­ய­மா­னவர். இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­பது, போரினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வது, போருக்குப் பிந்­திய நிலையில் அவர்­க­ளு­டைய வாழ்க்கை மேம்­பாட்­டுக்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­பது உள்­ளிட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குப் புதிய அர­சாங்­கத்தின் மூலம் தீர்வு காணப்­படும் என்ற உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே அவர் செயற்­பட்­டி­ருந்தார்.

அவ்­வாறு செயற்­பட்­டி­ருந்த சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க, பொறுப்பு கூற­லுக்­கான பொறி­மு­றையில் விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­கான நீதி­மன்­றமே அவ­சி­ய­மில்லை எனக் கூறு­வதும், அத்­த­கைய நீதி­மன்­றத்தைக் கோரு­வது புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தையும், அதன் ஊடாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற அர­சியல் தீர்வை எட்ட முடி­யாமல் போகும் எனக் கூறு­வதும் ஏற்­பு­டை­ய­தாகத் தெரி­ய­வில்லை.

போருக்குப் பிந்­திய அர­சியல் சூழலில், இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், தேசிய ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும், போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்­கான பொறுப்பு கூறு­வ­தற்­கான பொறி­மு­றையில் நீதி­மன்ற விசா­ரணை என்­பது மிக முக்­கி­ய­மா­னதும், தவிர்க்­கப்­பட முடி­யா­து­மான விட­ய­மாகும்.

எனவே, அதனைத் தட்­டிக்­க­ழித்­து­விட்டு, இன நல்­லி­ணக்கம் ஏற்­படும் என்றும் தேசிய ஒற்­று­மையை உரு­வாக்க முடியும் என்று கருதிச் செயற்­பட முற்­ப­டு­வது, கிணறு வெட்ட பூதம் கிளம்­பி­ய­தா­கவே முடியும். முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவைத் தோற்­க­டித்து, ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை வெல்லச் செய்து, புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக எடுக்­கப்­பட்ட முயற்­சி­களில் - தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில், போர்க்­குற்ற விசா­ர­ணையும், அர­சியல் தீர்வும் முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது.

போர்க்­குற்ற விசா­ரணை நடத்­தப்­படும். அர­சியல் தீர்வு எட்­டப்­படும் என்ற உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே ஆட்சி மாற்­றத்­திற்­கான ஆத­ரவைத் தமிழ் மக்கள் வழங்­கி­யி­ருந்­தார்கள். புதிய ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்றி இரண்டு வரு­டங்கள் நிறை­வ­டை­கின்ற நிலையில், அளிக்­கப்­பட்ட உத்­த­ர­வா­தத்தைத் தூக்கி எறியும் வகையில் செயற்­பட முற்­ப­டு­வது எந்த வகை­யிலும் நியா­ய­மா­காது.

தீர்வு காண்­பதை மழுங்­க­டிக்­கவே காலம் கடத்தும் உத்தி

யுத்தம் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­க­ளாகப் போகின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்­டுகள் ஓடி­விட்­டன. ஆனால் இன்னும் மனித உரிமைகள் மீறல்­க­ளுக்கும், போர்க்­கா­லத்து நீதி­யற்ற செயல்­க­ளுக்கும் பொறுப்பு கூறப்­ப­ட­வில்லை.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என வலி­யு­றுத்தி காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போர்க்­கொடி உயர்த்தி, சரி­யா­னதா, பிழை­யா­னதா என்­ப­தற்கு அப்பால், அர­சாங்கத் தரப்­புடன் ஒரு சுற்று பேச்­சுக்­களை நடத்தி, அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களில் நம்­பிக்கை இல்லை என்­பதை அடித்­துக்­கூறி, சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி போராட்டம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என்­பதை அறி­வித்­தி­ருக்­கின்­றார்கள்.

மறு­பு­றத்தில் இடப்­பெ­யர்வின் போதும், யுத்த மோதல்­களின் போதும், பொது­மக்­களின் குடி­யி­ருப்புக் காணி­களை அடாத்­தாகக் கைப்­பற்றி ஆக்­கி­ர­மித்­துள்ள படை­யி­னரை அங்­கி­ருந்து வெளி­யேற வேண்டும் எனக்­கோரி பாதிக்­கப்­பட்ட மக்கள் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் படை முகாம்­க­ளுக்கு எதிரில் சாத்­வீகப் போராட்­டத்தில் இரவு பக­லாகத் தொடர்ந்து ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

இத்­த­கைய ஒரு சூழ­லில் தான் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, பொறுப்பு கூறும் விட­யத்தில், மனித உரி­மைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வில் மேலும் ஒன்­றரை வருட கால அவ­காசம் கோரப் போவ­தாகக் கூறி­யி­ருக்­கின்றார்.

இந்தக் கோரிக்­கையை நியா­யப்­ப­டுத்தி, சிங்­கள மக்கள் மத்­தியில் உள்ள புத்­தி­ஜீ­விகள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் ஒன்­றி­ணைந்து ஐ.நா. மன்­றத்­திற்கு, அர­சாங்கம் கோரு­கின்ற கால அவ­கா­சத்தை வழங்க வேண்டும் எனக் கோரி, மகஜர் ஒன்றை அனுப்­பி­யி­ருப்­ப­தாகத் தக­வல்கள் கசிந்­தி­ருக்­கின்­றன.

ஐ.நா.வின் இலங்­கைக்­கான வதி­விட இணைப்­பாளர் உனா மெக்­கோலி அம்­மை­யா­ரும்­கூட, பொறுப்பு கூறு­வ­தற்­கான அர­சாங்­கத்தின் கால அவ­காச கோரிக்கை நியா­ய­மா­னது, ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­கது என்ற ரீதியில் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார். இது இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் கருத்தா அல்­லது அதன் இலங்­கைக்­கான இணைப்­பா­ளரின் தனிப்­பட்ட கருத்தா என்­பது தெளி­வில்லை. இருப்­பினும் அத்­த­கைய ஒரு சிந்­தனைப் போக்கு ஐ.நா. தரப்பில் காணப்­ப­டு­வ­தையே அவ­ரு­டைய கூற்று வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

தாம­திக்­கப்­பட்ட நீதி என்­பது நீதி மறுக்­கப்­பட்­ட­மைக்கு சம­னா­னது என்று கூறு­வார்கள். இலங்­கையின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறு­வ­திலும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­திலும், ஏற்­க­னவே காலம் தாழ்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. மேலும் காலம் தாழ்த்­து­வ­தற்கு எடுக்­கப்­ப­டு­கின்ற முயற்­சி­களை நீதி வழங்­கு­வதை மழுங்­க­டித்து, முற்­றாக இல்­லாமற் செய்­வ­தற்­கான ஒரு முன்­னெ­டுப்­பா­கவே நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஏனெனில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தற்­காக நடத்­தப்­பட்ட ஆணைக்­கு­ழுக்­கனின் விசா­ர­ணைகள் அனைத்­துமே முழு­மை­யா­ன­தொரு கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­க­ளா­கவே நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top