1150 x 80 px
இருக்க விருப்பமானவர்கள் இருக்கலாம் முடியாதவர்கள் வெளியேறலாம் - ரவீ கருணாநாயக்க

அரசாங்கத்தில் பிரபல அமைச்சு பதவி வகிக்கும் உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு சிறியதொன்றல்ல.  நிதி அமைச்சு பதவியிலிருந்து உங்களை நீக்குமாறு கோரி சிலர் பிரதமரிடம் ஆலோசனை முன்வைத்துள்ளதாகவும் செய்தி வெளிவந்தன. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? இதிலிருந்து நாம் ஆரம்பிப்போம்.

முதுகெலும்பு இல்லாத பொறாமையில் வாடும் சிலர் தான் அப்படி கூறியிருக்கிறார்கள். யார் கூறினார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு கேட்கவும் இல்லை. பத்திரிகைகளில் புதினம் பக்கத்தில் இருக்கின்றது. எல்லா இடங்களிலும் இந்த பொறாமைக்காரர்கள் இருக்கின்றார்கள். ஊழல் மோசடியை இல்லாதொழித்து ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கொள்கைகளை முடிந்தளவு வெகு விரைவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பம் வேண்டும் என்றே நான் முயற்சிக்கின்றேன். அதனை நாங்கள் மிகவும் விரைவுபடுத்திச் செல்கின்றோம். அது ஒருவருக்கு ஏற்றவாறு செயல்பட முடியாது. இந்த அமைச்சு பணிக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. ஒருவர் இருவர் தேவைக்கேற்ப இடமளிக்க முடியாது. நாம் இரு கட்சிகளை ஒன்றாக்கி வரவு செலவு திட்டத்தை உருவாக்கினால் அது சமமான வரவு செலவு திட்டம். சிலரது வயிறு வலிக்கு நாங்கள் பதிலளிக்க முடியாது.

ஆனால் சுமத்தப்படும் குற்றங்களுக்கு முடிவும் இல்லை. இரு கட்சிகளினது மோதலுக்கும் முடிவில்லை?

இல்லை. அப்படியொரு பிரச்சினையும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் இனவாதத்தை தூண்டு குழுவினர் இங்கு இருக்கின்றார்களே. ஜனாதிபதி, பிரதமர் மிகவும் நுணுக்கமாக அரசாங்கத்தை கொண்டு செல்கின்றனர். இது மஹிந்த ராஜபக்ஷவின் செயல்பாடே.

ஆனால் பகிரங்க ஊடகவியலாளர் கலந்துரையாடலில் இவ் இரு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்?

மைத்திரிபாலவுடன் வெளியே வந்து மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக செயல்பட்டவர்களையே விமர்சிக்க வேண்டும் என நான் கூறுகின்றேன். இப்பொழுது அப்படியான பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் இல்லை. எங்களுக்கு 107 கிடைத்துள்ளது. 113 இல்லையென்றாலும் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதாக நாங்கள் கூறியிருந்தோம். ஆதனால் இப்பொழுது விமர்சனம் தேவையில்லை. நாட்டை பாதிப்படையச் செய்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை தவிர ஏனையவர்கள் எம்முடன் இருக்கின்றார்கள். மக்கள் விடுதலை முன்னணி கூட தெரிவிப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்று. அனைவரும் ஒன்றாக இருக்கும் போது ஏதேனும் ஒரு பிரச்சினையை தூண்டினால் தோல்வியுற்றவர்களுக்கு சார்பாக அது அமைந்துவிடும்.

இருப்பினும் பிணைமுறி கொடுக்கல் வாங்கலை, அரசாங்கத்திற்கு விசேடமாக ஐதேகவிற்கு ஏன் இப்படி நடந்தது?

நான் நினைப்பது மஹிந்த ராஜபக்ஷர்கள், நிவாட் கபரால்கள் செய்தது இதைத்தான். நான் ஒரு நிமித்திற்கு எடுப்பது கணக்காய்வாளர் கூறிய கருத்தை. அதன் போது 1500 மில்லியன் நஷ்டம் என்று கூறப்பட்டது. இந்த 1500 எப்படி நடந்தது என்று தெளிவுபடுத்த வேண்டும். அவர் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். நாங்கள் கூறுவது 2005 தொடக்கம் 2015 வரை இதனையே செய்துள்ளனர். அதன் நஷ்டம் எவ்வளவு? அதனையும் காட்டுங்கள். நிவாட் கப்ராலுக்கு தெரியும் அவர்கள் என்ன செய்தார்கள் என்று. அதனால் தான் இதனை பிரச்சினையாக்க நினைக்கின்றார்கள்.

மக்கள் மத்தியில் பேசப்படுவது 2005-2015 இல்லை. கடந்த நாட்களில் இடம்பெற்ற  பிணைமுறி கொடுக்கல் வாங்கள் பற்றியே. மோசடி இடம்பெற்றதாக கோப் குழு அறிக்கை கூறுகின்றது. இது நாட்டினுள் அதிக பட்சம் விமர்சனத்திற்குட்பட்டது. அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது இதில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி நாட்டிற்கு தெளிவு படுத்த முடியுமா?

இங்கு ஊடகத்திற்கும் பொறுப்பு உள்ளது. அவர்கள் தான் வேறு விதமாக நாட்டிற்கு கூறியுள்ளனர். அது மட்டுமில்லாது இது எனது விடயமும் இல்லை. இதனைப் பற்றி அதிகளவில் பேசப்போனால் ஏன் இதனை பாதுகாக்கின்றீர்கள் ஏன் அதனைப் பாதுகாக்கின்றீர்கள் என கேட்பார்கள். அப்படியொரு அவசியம் எமக்கு இல்லை. 7600 கோடி நஷ்டஈடு செலுத்தியுள்ளோம். 635 கோடி கிரீன் பொன்ட். மற்றது ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம். ஆதில் 145 பில்லியன் நஷ்டஈடு. அதற்கு நீதிமன்றம் செல்வதற்கும் தவறு இருக்க வேண்டும் அல்லவா. அதனையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதனை தான் ஒரே இடத்தில் செய்கின்றோம். இது தான் அரசாங்கத்தினால் அரசாங்கத்தை பரிசீலனை செய்த முதல் சந்தர்ப்பம் ஆகும்.

கணக்காய்வாளரின் அறிக்கையில் பிரச்சினை உள்ளதாக தெரிவிக்கின்றனர்?

கணக்காய்வாளர் என்பவர் என்னைப் போன்று கணக்காய்வாளர். நாம் ஒன்றைக் கூறும் போது அதற்கான விமுறையும் பயன்படுத்த வேண்டும். அவரது அறிக்கையிலும் கூறுவது எனக்கு இதனை செய்வதற்கு பலம் இல்லை என்று. நானும் அதைப் பற்றி கூறுவேன். இதனைக் கூறுவதனாலேயே பிரச்சினை உள்ளது. அறிக்கையிலேயே இல்லை என்று தான் குறிப்பிடுகின்றது. இல்லாத ஒன்றின் பின்னால் தான் ஓடுகின்றனர்.

அப்படியாயின் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றா கூறுகின்றீர்கள்?

பிரச்சினையை உருவாக்கியிருக்கிறார்கள். நாங்கள் பார்ப்போமே ஜனாதிபதியின் விசாரனையும் இடபெறுகின்றது தானே.

மறுபுரம் அர்ஜூன் மகேந்திரன் பற்றிய கதை முடியவில்லை. தொடர்ந்தும் அரசாங்கத்தில் பதவி வகிப்பதாக சில நேரம் கூறுகின்றனர். இல்லை என்கிறார்கள். அர்ஜூன் மகேந்திரனால் இருவர் மூவர் பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் மேற்கொள்ளப்படும் விசாரனையில் தற்பொழுதும் பிரச்சினை இல்லாமல் இல்லை.

அர்ஜூன் மகேந்திர பற்றி மலிக் சமரவிக்கிரம  தவறான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கும் மேலானதொன்று இருக்கின்றதா? அங்கே கண்டோம். இங்கே கண்டோம். விமல் வீரவன்ச சிறைச்சாலைக்கு சென்றார் என பாராளுமன்றத்தில் கூறினாரா? குற்றவாளியாக்கும்வரை அவர் நிரபராதி. ஆர்ஜூன் மகேந்திரனின் பதவி காலம் முடிந்த பிறகும் மீண்டும் நியமிக்கவில்லை. யாருக்கு இந்த ஆசை இருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர் இது பற்றி முடிந்தளவு செய்ய முடியுமானவற்றை செய்கின்றனர். நிவாட் கப்ரால் செய்தவற்றை பற்றி விசாரனை செய்வார்களா? அனைத்திற்கும் இந்த அரசாங்கத்தை குறைகூறுகின்றனர்.

உங்களுக்கு நிவாட் கப்ராலின் மோசடியை கண்டு பிடிக்க முடியும் தானே. நீங்கள் தானே அரசாங்கத்தை கொண்டு செல்கின்றீர்கள். பெரிய பெரிய மோசடியை கண்டுபிடிக்க நிறுவனம் கூட உருவாக்கியுள்ளீர்கள் தானே?

இதுதானே பிரச்சினை. நாய்கள் வேலையை கழுதைகள் செய்வதில்லை. நீதிமன்ற வேலையை நீதிமன்றம் செய்யும். போலிஸாரின் வேலையை பொலிஸார் செய்வார்கள். FCID  வேலையை அவர்கள் செய்வார்கள். அந்த பொறுப்பை அவர்களுக்கு ஒப்படைத்துள்ளோம். நாங்கள் வெள்ளை வேன் அனுப்பாததினால் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் இதுதான்.

ஜனாதிபதியும் சில சந்தர்ப்பங்களில் பேசப்படும் கதை விவாதமாகவே உள்ளது?

சிறிசேன ஜனாதிபதிக்கு தெரியும் தன் பின்னால் இருப்பவர்களைப் பற்றி. அவருக்கு தெரியும் இந்த அரசாங்கத்தை எப்படி உருவாக்கியது என்று. அருக்கும் வேண்டும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு செல்ல. அதற்காகவே தான் அவர் தலையிடுகின்றார்.


GSP+ சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையில் 58 நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இது அரசாங்கத்தின் இடையூறு விளைவிக்கும் செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும்?

GSP சலுகை அவசியமில்லை என அன்று மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால் கூறினார்கள். அவர்களை அதனை இழந்தார்கள். இதன் மூலம் எமக்கு 200 பில்லியன் வருமானம் கிடைக்கும். இதில் என்ன தவறு. நாங்கள் இந்த சலுகையை மீண்டும் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்களுக்கு அடிப்பணிய மாட்டோம். அவர்கள் கடன் பெற்று திரடினார்கள். நாங்கள் கடன் பெற்றது நாட்டின் அபிவிருத்திக்காகவே. அது தான் மாற்றம். இதன் போது நாட்டில் இடம்பெறுவது சாதாரண சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதே.

அரசியலமைப் தொடர்பில் கூறும்போது வெளிவந்த காரணம் தான் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவா இல்லையா என்பது பற்றி. தற்பொழுதும் ஸ்ரீலசுக கூறுகிறது நிறைவேற்று அதிகாரம் இருக்க வேண்டும் என்று. ஐதேக கூறுகின்றது பாராளுமன்றத்திற்கு  அதிகாரம் வேண்டும் என்று. இந்த கயிறு இழுத்தலின் இறுதி தீர்மானம் பற்றி கூற முடியுமா?

ஜனாதிபதியும் பிரதமரும் இருப்பது ஒரே கொள்கையில். அதில் மாற்றம்  இல்லை.

நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுமா?

ஆம், நிச்சயமாக. அது தானே எமது உறுதி. நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக கூறியே சந்திரிக்காவும், மஹிந்தவும் வந்தார்கள். செய்தார்களா? இல்லையே. எமக்கு அப்படியொரு அரசாங்கம் தேவையில்லை. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி சொன்னதை செய்வார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியுடன் இல்லாதவர்கள் இப்பொழுது ஒவ்வொரு கதை சொல்கின்றார்கள்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top