1150 x 80 px
கோமாளி கிங்ஸ்
கோமாளி கிங்ஸ்!
லண்டனில் இருக்கும் Pat என்கிற பத்மநாதன் குடும்பம் கொழும்பில் நடக்கும் ஒரு கல்யாணத்துக்கு வருகிறது. பணத்தை அள்ளி வீச முடியாத, கிள்ளிப் போட மட்டுமே முடிந்த குடும்பம் அது. ஹோட்டலில் தங்க வசதியில்லாததால் சிவா வீட்டில் தஞ்சம்.
எதிர்பார்ப்பின் உச்சத்தில் பிள்ளைகள். நச்சரிக்கும் மனைவி. ஓடி ஒளிய முயற்சிக்கும் Pat. இலங்கையில் கதாநாயகனுக்கு கிடைக்கும் கடத்தல் நண்பர்கள் என்று பல சுவாரஸ்யங்களுடன் திரைக்கதை நகர்ந்து செல்கிறது.
இறுதிவரை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் இயக்குனர்.
இலங்கை பயணத்தில் Pat இற்கு என்ன நடக்கிறது? பத்மநாதன் குடும்பம் திரும்பவும் லண்டன் செல்கிறதா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கெல்லாம் சிரித்துச்சிரித்து பதில் சொல்கிறது ‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படம்.
எத்தனை நாளாகிறது இப்படியொரு சிரிப்புப் படம் பார்த்து.
இலங்கை தமிழ் சினிமாவில் சிரிப்புக்கென்று ஒரு இலக்கணம் வகுத்தவர் அமரர் மரிக்கார் எஸ். ராம்தாஸ் வசன நடையும் உடல் மொழியும் அவரது ‘ப்ளஸ் பாயிண்டுககள்;’ திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் எழுதி நடித்து இயக்கிப் பெயர் பெற்றவர் அவர.; அவரது இடத்தைப் பிடிக்கிறார் கிங் ரட்னம். குறைத்து பேசி சிலநேரம் பேசாமல் மழுப்பியும் அப்பாவி முக பாவனையும் இவரது ‘ப்ளஸ் பாயிண்டுகள்’ இவரும் எழுதி நடித்து இயக்கிப் பெயர் பெறுகிறார்.
‘இலங்கை நாகேஸ்’ ராஜா கணேசனுக்கு ஆசை அதிகம். அதை அப்படியே மனுஷன் திரையில் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார். வில்லன் கஜன் கணேசனுக்கு காமெடியும் நன்றாக வருகிறது. அவருக்கான வசனங்கள் சிறப்பாக அமைந்துள்ளதுதான் காரணமோ? குறிப்பாக அவர் ஆங்கிலம் பேசும் காட்சி. துப்பறியும் சிங்கம் தர்ஷனுக்கு முதலிரவிலேயே சோதனை ஆரம்பிக்கிறது. ஆனால் குடும்பத்தில் பிரச்சினை வராமல் சமாளிக்கிறார். சந்தர்ப்பம் கைகொடுக்க இறுதியில் எல்லா நல்ல பெயருக்கும் சொந்தம் கொண்டாட முடிகிறது. சத்யபிரியாவுக்கு அத்தனை பெரிய மகளா? ரெக்ஸோனா குடும்பம் போலிருக்கிறது. நிரஞ்சனி சண்முகராஜா இன்னும் கொஞ்சம் முறைத்திருக்கலாம் (படத்தில் மட்டும்) வைசூ பாத்திரம் ஓ.கே. ஆனால் தம்பிக்கு இன்னும் கொஞ்சம் செல்பேசி காமெடி சேர்த்திருக்கலாம். அஞ்சி, ராஜா கணேசனின் மனைவி, சக வில்லன்கள், காய்கறிக்காரன், துப்பறியும் சிங்கத்தின் மனைவி, அந்த டிரைவர் ஆகியோர் கொடுத்ததை சிறப்பாக செய்திருக்கிறார்கள்;
கோமாளி கிங்ஸ் படத்தில் முத்திரை பதிப்பவர் இசையமைப்பாளர் ஸ்ரீராம் சச்சி. Find of the film அவர்தான். சச்சி எங்கே இருந்தாய் இத்தனை காலம்? கிங் ரத்னத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். சச்சியை கண்டு பிடித்துக் கொடுத்ததற்காக. இளைய தலைமுறைக்கு ஏற்ற 3 பாடல்கள். அத்தனையும் துள்ளல் ரகம். BGM இல் கலக்கல் வேறு. இப்பாடல்கள் உள்ளுர் பண்பலை வானொலிகளில் ஏற்கனவே அணிவகுக்க ஆரம்பித்திருப்பது குறிப்பித்தக்கது. ஒரு வானொலியின் இசைத் தேர்வில் இப் பாடல்கள் தென்னிந்திய தமிழ்ப் பாடல்களுடன் கோதாவில் இறங்கியுள்ளன. வானொலி நிலையங்களின் இந்த மனமாற்றம் வரவேற்கத்தக்கது. அது தொடர வேண்டும்.
இசை மட்டுமல்ல படத்தின் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, ஆகியவை நன்றாக உள்ளன. படத்தொகுப்பில் ஓரிரு இடங்களில் கடயளா கசயஅநள தெரிகிறது.
கிங் ரட்னத்தின் முதல் சினிமாப்படம் இதுதான் என்றாலும் விளம்பரப் படத் துறையில் அவர் அனுபவம் பெற்றவர். அதனால்தான் எழுதி நடித்து இயக்குவதுடன் தொழில் முறை நேர்த்தியான படத்தை அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது.
வெறுமனே கோமாளிகள் கும்மாளத்துடன் மட்டும் இருந்து விடாது இரண்டு நல்ல செய்திகளையும் இறுதியில் சொல்லிவிட்டுத்தான் போகிறார் கிங் ரத்னம்.
எந்த ஊருக்கு போனாலென்ன இலங்கை தமிழ்ப் பெண் வெளிநாட்டு இளமைச் சீரழிவு பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை வைசூ மூலமும் வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை வாழ்வதை விட எங்கள் நாட்டில் இருந்து கொண்டே உழைத்து வாழ்வது நல்லது என்பதை அஞ்சி மூலமும் சொல்கிறார் கிங்.
1993 இல் வெளியான ஜே.ஜே. ஜூனைதீனின் ‘சர்மிலாவின் இதய ராகம்’ படத்துக்குப் பிறகு 25 வருடங்களின் பின் வெளியாகும் இலங்கைத் தமிழ் படம் இது. இத்தனை காலம் காத்திருந்தது வீண் போக வில்லை.
இத்தனைக்கும் மேலாக இப் படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். இலங்கை தமிழ் சினிமாவின் இரண்டாவது இன்னிங்ஸ_க்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள். 25 வருட காலமாக எவரும்செய்ய முன்வராத செயலை துணிச்சலுடன் முன்வந்த அவர்கள் முயற்சி திருவினையாகும் என்று நம்பலாம்.
இதுவரை இலங்கையில் தமிழ்ப் படம் தயாரிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து வந்த தயாரிப்பாளர்கள் இனி தைரியமாக இதில் இறங்கலாம். தயாரிப்பு செலவுகளில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். பாதையை திறந்திருக்கிறார்கள். பயணம் செய்யலாம். வாகனத்தை மட்டும் நல்லதாக அமைத்துக் கொள்ளுங்கள். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் உயரட்டும் இலங்கை தமிழ் சினிமா.
நிச்சயம், அனைவரும் குடும்பத்துடன். திரையங்கு சென்று பார்வையிட வேண்டும்.
- ராம்ஜி

- நன்றி மலையக குருவி

Komali1

Komali2

Komali3

Komali4

Komali6

Komali7

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top