1150 x 80 px
ரவி சென்றால் நல்லது என்கிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விலகினால் நன்மை பயக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் விசாரணைக் குழுவும், ரவி கருணாநாயக்கவை பதவி நீக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரிப்பதற்கு அமைச்சர் திலக் மாரப்பண தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தொடர்புபட்டுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சித் தலைமைத்துவதற்கு ஆலோசனையும் அந்தக் குழு வழங்கியுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top