1150 x 80 px
இளைஞர்கள் காணாமல் போனது உண்மை : ஆனாலும் கடற்படையினரைக் காக்க உதவிடுங்கள் என்கிறார் சட்டத்தரணி

கப்பம் பெறுவதற்காக 2008 - 2010 இடைப்பட்ட காலத்தில் 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று? காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்து கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக நடைபெறும் வழக்கு விசாரணையில் கடற்படை உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்காக உதவுமாறு சட்டத்தரணி சித சிறிவரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியுள்ளார்.

''இளைஞர்கள் கடத்தப்பட்டது உண்மைதான். இவர்களின் கைகளினால் அவர்கள் கொல்லப்பட்டதும் உண்மை. எனினும், கடற்படை உறுப்பினர்களைக் காப்பாற்ற உதவிடுங்கள். நாங்களுக்கும் உங்களுக்கு உதவுகிறோம். ''இதற்கான முழுப் பொறுப்பு நேவி சம்பத் எனப்படும் சம்பத் முணசிங்கவே"' என்ற வகையில் வேலைகளை செய்வோம்.'' என்று பிரசாத் ஹெட்டியாராச்சி என்ற சந்தேக நபர் சார்பாக முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி அசித சிறிவர்தன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷான் அபேசேகரவிடமும், பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் இருவரும் இதுகுறித்து தமது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொண்டுள்ளதுடன், இன்று இதுகுறித்து நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின் பிரதியையும், வழக்கின் மேலதிக தகவல்களையும் தர காத்திருக்கிறோம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top