1150 x 80 px
பொதுத் தேர்தலுக்கான அறிகுறி : உள்ளுராட்சி சபைத் தேர்தல்

பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு மகிந்த ராஜபக்சவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பட்டுள்ள பாரிய தோல்வியை அடுத்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பணிகளை முன்னெடுத்த பசில் ராஜபக்ச இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தற்போது அரசாங்கத்திற்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விரைவில் பொதுத் தேர்தல் ஒன்று வருவதான அறிகுறி இருப்பதாகவும் அரசியல் அவதானிகள் சிலர் கருதுகின்றனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top