1150 x 80 px
கடமையை சரிவர செய்யாத பொலிஸ் அதிகாரிகள்

மத்திய மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என மாநாயக்கத் தேரர்கள் கோரிக்கை என்ற தலைப்பில் கடந்த 08ஆம் திகதி வெளியிடப்பட்ட செய்தி குறித்து பதில் ஒன்று எமது மின்னஞ்சலுக்கு கிடைத்துள்ளது.

பதிலளிக்கும் உரிமைக்கமைய அந்த பதில் இவ்வாறு அமைந்திருந்தது.

''08.03.2018ஆம் திகதியில் சிங்கள லங்கா நியூஸ் வெப் நெட் என்ற தளத்தில் வெளியான செய்தி குறித்து தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெல்தெனிய புரகதி லக்மினி மற்றும் பல்லேகொலே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.என். ஜயசேகர ஆகியோர் குறித்து உங்களின் இணையத்தில் வெளியான செய்தியில் உள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல எந்தவொரு சம்பவமும் இருவருக்கிடையே அல்லது பிரதி பொலிஸ்மா அதிபருக்கிடையே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடக்கவில்லை. எனினும், உங்களின் செய்தியில் பொய்யான தகவல்களைப் புனைந்து வாய்வழிச் செய்திகளை வைத்து செய்தியைத் தயாரித்துள்ளதை தெரியப்படுத்துகிறோம். அத்துடன், பல்லேகொலே பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசேகர என்ற எனதும:, தலைமையக பொலிஸ் பரிசோதகர் தெல்தெனிய அதிகாரியினதும் பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்டப்பட்டுள்ளதுடன், இந்தச் செய்தி எவ்வித ஆதாரங்களும் அற்ற வகையில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியைப் போல, எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை. ஒரே சந்தர்ப்பத்தில் பல இடங்களில் சம்பவங்கள் நடந்துள்ளமையினால் இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான பொய்யான தகவல்களின் மூலம் பொதுமக்களை பிழையாக வழிநடத்துவதுடன், நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் குறித்தும், அனைத்து அரச அதிகாரிகள் குறித்தும் பிழையான எண்ணத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது. எனவே, உங்களின் இணையத்தில் வெளியிடப்பட்ட பொய்யான செய்தியை திருத்தி வெளியிடுமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்'' என எமக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு :

தெல்தெனிய பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் பிரகதி லக்மினி மற்றும் பல்லேகொல பொலிஷ் பொறுப்பதிகாரி பீ.என். ஜயசேகர ஆகியோர் கையெழுத்திட்டு குறித்த மின்னஞ்சல் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தங்கள் இருவர் குறித்தும் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், முதலாவது ஒன்றைக் குறிப்பிட வுண்டும். பல்லேகொல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறித்து அந்தச் செய்தியில் நாம் எதனையும் குறிப்பிடவில்லை. அந்த செய்தியில் தெல்தெனிய மற்றும் பலகொல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் குறித்தே செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த துப்பாக்கிச் சூடு உத்தரவு குறித்து நாம் பொய்யான தகவல்களை வெளியிட்டதாகவும், பொதுமக்களையும், அரச அதிகாரிகளையும் பிழையான வழிநடத்துவதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், எமது அன்றைய செய்தியில் துப்பாக்கிச் சூடு உத்தரவு வழங்குவதற்கு பின்பற்ற வுண்டிய வழிமுறைகளும், இந்த உத்தரவுகளை வழங்கக் கூடிய அதிகாரிகள் குறித்துமே குறிப்பிட்டிருந்தோம். இனவாத வன்முறைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு உத்தரவு வழங்கப்படாமை மற்றும் கண்டி மற்றும் மத்திய மாகாண உயர் பொலிஸ் அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் குறித்தே எமது செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தமது உயர் பொலிஸ் அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில், பிழைகளைத் தாம் ஏற்றுக்கொள்வதைப் போல அவர்கள் அனுப்பியுள்ள பதில் கடிதத்தின்மூலம் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. பல்லேகொலே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. அப்படியெனில், பல்லேகொல மற்றும் தெல்தெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு உரிய அதிகாரங்களும், வளங்களும் வழங்கப்பட்டிருந்த போதிலும் வன்முறையைக் கட்டுப்பாட்டுக் கொண்டுவர முடியாமல் போனது. இல்லையெனில் திட்டமிட்ட அடிப்படையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதை அவர்கள் தவிர்த்துள்ளனர்.

இதன்படி பொலிஸ் விதிமுறைகளுக்கமைய, இவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும், இவர்களின் கடமைகளையும் சரிவரச் செய்யவில்லை என்பதே இதன்மூலம் புலனாகின்றது. வன்முறைகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், சொத்து சேதங்களும் இவர்கள் இதன்மூலம் வழி ஏற்படுத்தியுள்ளனர். அதிகாரங்கள் இருந்தும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராது, வன்முறைகள் ஏற்பட இவர்கள் காரணமாக இருந்துள்ளனர்.

இவர்கள் தமது கடமையை சரிவரச் செய்யவில்லை என்பதை இவர்கள் எமக்கு அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சல் பதிலில் உறுதியாகியுள்ளது. இவர்களின் கையெழுத்துடன், இவர்கள் தமது பிழையை ஏற்றுக்கொண்டுள்ளமை இதன்மூலம் உறுதியாகின்றது. எதிர்காலத்தில் இவர்களுக்கு எதிராக பொலிஸ் சட்டதிட்டங்களுக்கமைய ஒழுக்காற்ற நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அவர்கள் அனுப்பிவைத்துள்ள இந்த மின்னஞ்சல் போதுமானதாக இருக்கும் என நம்புகின்றோம்.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் தமது கையெழுத்துடன் அனுப்பிவைத்துள்ள பதிலை கீழே பார்வையிடலாம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top