1150 x 80 px
மேஜர் அஜித் பிரசன்னவின் தோலுரித்த பொதுபல சேனா

சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணைகளை நடத்தி, அவரை சட்டத்துறையில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என பிரதம நீதியரசரிடம் பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனா தமது கோரிக்கையை எழுத்துமூலம் முறைபாடாக சமர்ப்பித்துள்ளது.

சட்டத்தரணி அஜித் பிரசன்ன அங்கவீனமான இராணுவ வீரர் என்று தன்னைத் தானே கூறிக்கொண்ட போதிலும் அவர் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் பணியாற்றியவர் அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு இவரை மாற்றம் செய்த போதிலும் அனைத்து சந்தர்ப்பங்களில் இருந்து அவர் நழுவியுள்ளதாக தெரியவருகிறது. இறுதியாக அவரை இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விசாரணை செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தண்டனைக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அஜித் பிரசன்ன, உயர் அதிகாரிக்கான பரீட்சையின் போது மோசடி செய்து பிடிப்பிடிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது முறையாகவும் இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதன்படி அஜித் பிரசன்ன இரண்டு முறை இராணுவ நீதிமன்றில் தண்டனை பெற்றுள்ளார். இதன்பின்னரே இவர் இராணுவத்தில் இருந்து விலகியுள்ளார். அஜித் பிரசன்ன சட்டத்தரணியாக உயர் நீதிமன்றில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட போதிலும், இராணுவ நீதிமன்றில் தண்டனைப் பெற்றதை இவர் மறைத்துள்ளார். இதன்மூலம் நீதிமன்றத்தை இவர் பிழையாக வழிநடத்தியுள்ளார்.

இதனால் அஜித் பிரசன்னவிற்கு சட்டத்துறையில் பணியாற்றுவதற்கு அறுகதை அற்றவர் எனவும், இவர் குறித்த துறையில் இருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் நியாயமானதே.

அஜித் பிரசன்ன மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top