1150 x 80 px
தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஒலிம்பிக் குழுவின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட ஒலிம்பிக் குழு அதிகாரிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் உப தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தோல்வியடைந்தார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோவைவிட, பாலித்த பெர்னாண்டோ ஐந்து வாக்குகளைக் குறைவாகவே பெற்றிருந்தார். எனினும், பாலித்த பெர்னாண்டோவை தவறுதலாக உபதலைவராக தேர்தல் குழுவினர் நியமித்துள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்பத் 18 : பாலித்த 12

இந்தத் தேர்தலின் போது மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ 18 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ 13 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார். எனினும், தேர்தல் குழுவினரால் ஏற்பட்ட தவறு காரணமாக பாலித பெர்னாண்டோ வெற்றிபெற்றதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய ஒலிம்பிக் குழுவிடம் எமது செய்திப் பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோது, எமது கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். எனினும், தவறு ஒன்று நடந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top