1150 x 80 px
மைத்திரிக்கு ஆப்பு வைத்து மகிந்தவிற்கு ஆதரவு வழங்கத் தயாராகி வரும் எஸ்.பி.

மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவின் ஒரு தலைமயிர் அளவிற்கேனும் பெறுமதியற்றவர் என கடந்த தேர்தல் பிரசாரப் பணிகளின் போது அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

எனினும், தேர்தலின் பின்னர் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொண்ட எஸ்.பீ.திஸாநாயக்க, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த முயற்சி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அடுத்த பிரதமராக பதவி வகிக்கும் கனவில் எஸ்.பீ. இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து வருகிறோர். சரியான நேரத்தில் சிறிசேனவிற்கு எதிராக செயற்படும்போது அதற்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவதாக மகிந்த ராஜபக்சவிற்கு தகவல் அனுப்பி வருகிறார்.

எஸ்.பீ.யின் இந்த இரட்டை வேடத்தினால் தாம் அதிருப்தியும், அசௌகரியத்தையும் எதிர்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top