1150 x 80 px
எமில் ரஞ்சன், ரங்கஜீவ ஆகியோருக்கு சொகுசு வசதி

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக நேற்று (29) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் எவ்வகையிலும் நோய்வாய்ப்படவில்லை எனவும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் சிறைச்சாலை வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இருவருக்கும் சொகுசு வசதிகளுடன் கூடிய வார்ட்டில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளதாக சிறைச்சாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக சிறைச்சாலைக்குச் செல்லும் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் பெரும்பாலும் சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே காலத்தைக் கழிப்பர்.

சிறைச்சாலைகளில் அவர்களுக்கு திடீரென ஏற்படும் பல்வேறு சுகயீனங்களைக் காரணமாகக் கூறி இவர்கள் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலைக்குச் செல்வர்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் பல வசதிகளுடன் கூடிய வார்ட்டுகள் இருக்கின்றன. இவற்றிலேயே தற்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எமில் ரஞ்சன், ரங்கஜிவ ஆகியோர் சேர்கக்ப்பட்டுள்ளனர்.

இதில் மிக முக்கியமான விடயம் என்னவெனில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள குறித்த இருவரும், வைத்தியசாலை அதிகாரிகளின் சொகுசு வசதிகள் கூடிய அறைகளில் தங்கியிருப்பதாக தெரிவருகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top