1150 x 80 px
அமல் கருணாசேகரவிற்கு வெளிநாடு செல்வதற்கு மீண்டும் தடை

ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவப் படையணியின் மேஜரல் ஜெனரல் அமல் கருணாசேகரவிற்கு வெளிநாடு செல்வதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் நேற்று (01) இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

அத்துடன், கபில ஹெந்தாவிதான, நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தியமைக்கான விளக்கத்தை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

த நெசன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் இரணுவ அதிகாரி, வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top