1150 x 80 px
பதவி விலகுமாறு சு.க உறுப்பினர்களும் ரணிலுக்கு அழுத்தம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுவரும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்திற்கு முன்னர் பிரதமர் ரணிலை சந்தித்து விலக கோரவுள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்திருந்தது. அதற்கமைய தற்போது குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top