1150 x 80 px
மனுவை மீளப் பெற்ற பாதுகாப்புச் செயலாளர்

ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவிற்கு எதிராக வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி நீதிமன்றில் கோரி தாக்கல் செய்த மனு மீளப் பெறப்பட்டிருந்தது.

அமல் கருணாசேகர, வெளிநாடு செல்வதற்கு தயார் நிலையில் இல்லை என சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்கக் கோரிய மனு மீளப்பெறப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் கைதுசெய்யப்பட்டார்.

இவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top