1150 x 80 px
மலிக், ரவி ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள்

சமுர்த்தி, தொழிற்பயிற்சி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி பதில் அமைச்சராக அமைச்சர் மலிக் சமரவிக்ரம பதவியேற்பார் எனத் தெரியவருகிறது.

இதனிடையே அரசாங்கத்தில் இருந்து விலகாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் 17 பேர் நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

விஜித் விஜயமுனி சொய்சா, காதர் மஸ்தான், அங்கஜன் ராமநாதன் உட்பட சிலர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, புதிய அமைச்சரவை பதவியேற்கும் போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்படலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன.

நிதியமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார்.

பிணை முறி தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரவி கருணாநாயக்கவின் பெயர் பேசப்பட்டதை அடுத்து அவர் வெளிவிவகார அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top