1150 x 80 px
ரணில் - மகாராஜா இணைவின் தொடக்கமா இது!

சக்தி - சிரச ஊடக வலையமைப்பின் உரிமையாளர் ராஜமகேந்திரன் (கிளி), டெல்சான் நெட்வர்க்ஸ் (TNL) உரிமையாளர் சான் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நேற்று (20) சந்திப்பொன்று நடந்துள்ளது. டெல்சான் நெட்வேர்க்ஸ் நிறுவனத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

அரசியல் இணக்கப்பாட்டின் முன்னேற்பாடாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தெரியவருகிறது.

சிரச ஊடக வலையமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஊடகப் பணியைத் தாண்டி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்கு ஊடக நிறுவனம் என்ற வகையில் TNL ஊடகத்தில் மட்டுமே சிரச ஊடக நிறுவனங்களின் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. காரணம் TNL ஊடகம் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரர் என்பதனால் ஆகும். இதன்படி கடந்த 19ஆம் திகதி TNL ஊடகத்தில் மகாராஜா குறித்து வெளியிடப்பட்ட செய்தியே 20ஆம் திகதி நடந்த சந்திப்பிற்கு மூல காரணமாக அமைந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்தச் சந்திப்பின் பின்னர் சிரச - சக்தி ஊடகங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பிரசாரங்கள் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பு ரணில் - ராஜமகேந்திரன் ஆகியோரை இணைப்பதற்கான முன்னேற்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

kili maharaja

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top